சௌமஹால்லா அரண்மனை - ஹைதராபாத்.
ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மானின் தந்தை மெஹ்பூப் அலிகான் வாழ்ந்து அனுபவித்த இடம்.
ஒஸ்மான் சௌமஹால்லா அரண்மனைல உலாத்திக் கொண்டிருந்தார். ஒரு அறைல ஓரமாக ஒரு ஜோடி செருப்புகள் கிடந்தன. எந்த பொருளும் வீணாக போகிறது என்றால் ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மானுக்கு தாங்க முடியாது. (ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் ஒரு மகா கஞ்ச மகாராஜா) அருகில் சென்று பார்த்தார். அவை தம் தந்தையின் செருப்புகள் என்று தெரியவந்தது. தந்தையின் செருப்பு தம் கால்களுக்குப் பொருந்திப் போனால் அணித்து கொள்ளலாம் என்று அவற்றை அணிய முற்பட்டார். ஒரு செருப்பில் ஏதோ தட்டுப்பட்டது. அந்த செருப்பை கைல எடுத்து தட்டுப்பட்ட பொருளை வெளியே எடுத்துப்பார்த்தார். அது மினுமினுத்தது. " இது ஜோலிகறதே, ஒரு வேளை வைரமாக இருக்குமோ, அப்படி இருந்தால் என் தந்தை அதை செருப்பில் பதுக்கி வைத்து என்ன பண்ணபோகிறார், இது வைரமாக இருக்க வாய்ப்பு இல்லை " என்று ஒரு தீர்மானத்துக்கு வந்தார் ஒஸ்மான், அதை தன் பைஜாமாவின் பைக்குள் போட்டுவிட்டு நடையைக்கட்டினார்.
அந்த பொருள் உண்மையில் வைரம் தான். அது உலகின் ஏழாவது பெரிய வைரம். அதன் பெயர் ஜேக்கப் வைரம். எடை 184.5 கராட், அதாவது 36.9 கிராம்.
ஜேக்கப் வைரம் பற்றி ஒரு சின்ன குறிப்பு.......
ஆப்பிரிக்காவின் ஒரு சுரங்கத்தில் கண்டடுகப்பட்டது இந்த வைரம். அழகான வைரத்துகே உரிய வடிவத்தில் வெட்டுவதுக்கு முன் 400 காரட் இருந்தது. பின் அது ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டு வடிவமைக்கப்பட்டது.
1891 ஆம் ஆண்டு ஒரு கோடைக்காலம். நாக்கு வெளியே தள்ள ரெண்டு குதிரைகள், சௌமஹால்லா அரண்மனை வாசலில் வந்து நின்றன. அந்த வண்டியில் இருந்து இறங்கினார் அலெக்ஸ்சண்டேர் மால்கன் ஜேக்கப். துருக்கியர், நாப்பது தாண்டிய வயது, ஆள் கொஞ்சம் குள்ளம், கருமையான தலை முடி, எடுப்பான உடை, மிடுக்காக நடக்க ஆரம்பித்தார். அரண்மனைக்கு அடிக்கடி வந்து செல்பவர் என்பதால் காவலர்கள் யாரும் தடுக்கவில்லை. ஒரு கடல் பயணத்தின் போது, கப்பல் உடைந்துவிட, பம்பாயில் கரை ஒதுங்கியவர் ஜேக்கப். கைல காசு இல்லாமல் பம்பாய் நகரில் சுற்றி திரிந்து பின் ஹைதராபாத் சென்று பிழைப்பு நடத்த ஆரம்பித்தார். ஒரு நகை வியாபாரிடம் வேலை கிடைத்தது. சில வருடங்களில் ராம்பூர் சமஸ்தான நிஜாமுக்கு நகைகள் விற்கும் ஏஜென்ட்டாக செயல்பட்டார். பிறகு தோல்பூர் சமஸ்தான மகாராஜாவுக்கும் பணியாற்றினார். வாழ்க்கை வசதி மிகுந்ததாக மாறியது.
ஹைதராபாத் நிஜாம் மெஹ்பூப் அலிகானின் நட்பு கிடைத்தது. அவருக்கு நகைகள் வாங்கி கொடுக்கும் ஏஜென்ட்டாக பண்ணியற்ற ஆரம்பித்தார். அன்றைய தினத்திலும் அந்த வேலையாகத்தான் வந்திருந்தார்.
மெஹ்பூப் அலிகான் ஜேக்கப்பை வரவேற்று நலம் விசாரித்தார். ஜேக்கப் தான் கோர்ட் பையில் கைவிட்டு அந்த வைர கல்லை வெளிய எடுத்தார். மெஹ்பூப் அலிகான் தன் கையில் வாங்கி பார்த்தார் அவரது கருவிழிகளில் வைரம் ஜொலித்தது.
ஜேக்கப் நிஜாம்மிடம், இது மாதிரி கல் தான். உண்மையான வைரம் பிரிட்டனில் உள்ளது விலை 46 லட்சம் தாங்கள் சரி என்று சொல்லிவிட்டால், தொகையில் பாதியை நீங்கள் கட்டி விட்டால் வைர கல்லை வர வழைத்து விடலாம். அதற்கு நிஜாம், சரி வாங்கி விடலாம் முதலில் அசல் வாங்கி வாரும், அதை நான் பார்த்து விட்டு திருப்தியாக இருந்தால் பணம் கொடுக்கிறேன் என்றார்.
ஜேக்கப் அங்கிருந்து வியாபாரம் வெற்றியுடன் முடிந்து விட்ட திருப்தியுடன் கிளம்பினர்.
(நன்றி : திரு.முகில் - அகம்,புரம்,அந்தபுரம்)
அப்புறம் தான் ஜேக்கப்க்கு நம்ப ஹைதராபாத் நிஜாம் மெஹ்பூப் அலிகான் அடில ஆப்பு வெச்சு அடிச்சாரு...... அந்த ஆப்பு மேட்டர் அடுத்த பாகம்.