Wednesday, April 27, 2011

மாலுமி ஓர் அறிமுகம்

வணக்கம் மச்சிகளா,

என் பெயர் மாலுமி, இந்த பெயர் வர காரணம் நான் ஒரு ப்ரபஷ்னல் குடிகாரன். எபோதுமே தண்ணில இருப்பேன் (அதிகம் இல்லை ஜெண்டில் மேன் தினம் இரண்டு பெக் தான்), அதுனால...... (டேய்... டேய்... நிறுத்து.... இப்போ நீ என்ன சொல்ல வர....)

மச்சி ஒரு குவட்டேர் ஒன்னு சொல்லு......... (அட..... தூ தூ தூ தூ......பன்னாட பரதேசி நாயே.....)

மச்சி துப்பறதா இருந்தா மூஞ்சில துப்பு தலைல துப்பாத, ஏன்னா மூஞ்சில துப்புனா தொடசுகலம் தலைல துப்புனா குளிகோணும் அதுனால தான். (டேய்........$#@%#^%$^%&.........சரி மேல சொல்லு....)

இந்த பதிவுலகில் உள்ளே வர காரணம் நமது பதிவுலக டான் மதிப்பிற்குரிய பட்டாபட்டி அவர்கள் தான்.

பட்டா னா.... வணக்கமுங்க.......

அவரின் ஹோர்லிக்ஸ் பாட்டேல் பதிவை படுச்சுட்டு, நான் ஆபிசில் தனியாக விழுந்து விழுந்து சிரிக்க அதை எல்லோரும் ஒரு மாதிரியாக பார்க்க அதை நான் சமாளிக்க பட்ட பாடு எனக்கு தான் தெரியும். அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும். அதன் பிறகு தான் பதிவுகளை படித்து என் ஆபீஸ் டென்ஷன் கம்மிய இருக்குது. 
(அப்படியா... சரி அப்புறம் என்ன ?????)

அப்புறம் என்ன............ குரு வணக்கம் தான்

என் குரு வணக்கம் - டெரர் கும்மிக்கு

(அவர்கள தான் நான் என்னோட முதல் பதிவு போட முடிச்சது, எனக்கு தமிழ்ல எப்படி டைப் பண்ணுறதுனு கைய புடுச்சு கத்து கொடுத்தது, ட்ரவுசர் கழுட்டி அடிச்சது முதல் $%#  &*@ வரை எல்லாமே டெரர் கும்மி குரூப்ல இருக்குற அந்த 32 பேர் தான், அதுல முக்கியமா டெரர், பன்னிகுட்டி, போலீசு, பாபு, மாணவன், வைகை, வெறும்பய, நரி, மங்குனி, எஸ்.கே., சௌந்தர், அருண், செல்வா, MLA, கார்த்திக்  போன்ற பல நாதாரிகளும் வெங்கட், பெ.சொ.வி. மாதவன் போன்ற பல நல்லவர்களும்)

இது டெரர் கும்மி நாதாரிக்களுக்காக.........

கவுரமான வேலை, நிரந்தர வருமானம் தவிர படை எடுப்பின்போது அடிக்கப்படும் கொள்ளையில் பங்கு போன்றவை தான் ஆரம்ப காலத்தில் இந்திய மக்களை ராணுவத்துக்கு ஈர்த்தது. பின்னாளில் சட்ட திட்டம், வரைமுறை என்று ராணுவம் பல கட்டுப்பாடுகள் கொண்டதாக வகுக்கப்பட்டது. கிழக்கு இந்திய நிறுவனத்தின் சிப்பாயாக இருப்பது குடும்பத்தில் மகிழ்ச்சியும் பெருமைகுரியதகவும் மாறிப்போனது. இதனால் அடுத்தத்அடுத்த தலைமுறை தலைமுறையாக தாத்தா, அப்பா, மகன் என்று நிறுவனத்தில் சிப்பாயாக இடம் பெற்றார்கள் அதற்காக போட்டியும் போட்டார்கள்.

அப்போதைய வெள்ளைகரர்களும் தங்களின் கீழ் பணியாற்றிய சிப்பாய்களுடன் நெருக்கமாக அன்புக்காட்டி பழகினார்கள். இதனால் புல்லரித்துப்போன சிப்பாய்களின் கடமையுணர்வும் விசுவாசமும் எல்லையில்லாமல் போனது.

சாதரணமாகவே இந்திய மக்கள் நன்றியும் எஜமான் விசுவாசமும் கொண்டவர்கள். அதிகாரிகள் அளவுக்கு மீறி அன்பு காட்டினால் கேட்கவும் வேண்டுமா?. ஆற்காட்டின்  போரின் போது, ஒரு முறை ராஜா சாகிப்பின் முற்றுகையில் கிளைவ் படையில் உள்ளவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது சுதேசி சிப்பாய்கள் கிளைவ்விடம்  வந்து, "கேப்டன், உணவுப்பொருள் குறைகிறதே எப்படி சமாளிப்பது என கவலைப்படாதிர்கள். நாங்கள் வெறும் கஞ்சி குடித்தே பசி தீர்த்துக்கொள்வோம். நல்ல சாப்பாடை நீங்களும் உங்கள் பிரிட்டஷ் சிப்பாய்களும் சாப்பிடுங்கள்", என்று கூறினார்களாம்.

18 ஆம் நூற்றண்டு வரையில் இருந்த இதை நெருக்கமான உறவு 19 ஆம் நூற்றண்டின் தொடக்கத்தில் அதிகாரிகளின் மனைவிமார்களும் வந்து இந்தியாவில் குடியேற தொடங்கியதுமே காணாமல் போனது. இந்திய கறுப்பர்களுடன் தங்களின் கணவன்மார்கள் நெருங்கிப் பழகுவதை இங்கிலீஷ் பெண்கள் விரும்பவில்லை.

சீதாரம் பாண்டே என்கிற சிப்பாய் எழுதிய "நினைவு குறிப்புகளில்" ஒரு குறிப்பு இப்படி சொல்கிறது,
"முன்பெல்லாம் ஆபீசர்கள் சிப்பாய்களுடன் சேர்ந்து நாட்டிய நிகழ்சிகளில் பங்கு கொள்வார்கள். ஒன்றாக உட்கார்த்து உணவு அருந்துவார்கள், வேட்டைக்கு செல்வார்கள், விளையாடுவார்கள். இப்போது அருகிலேயே வருவது இல்லை. எல்லாம் அவர்களின் மனைவிமார்கள் போதனை"

( நன்றி! திரு. உமா சம்பத் - 1857 சிப்பாய் புரட்சி (பக்கம் 56 - 57)

மச்சிகளா, எனக்கு ஒரு சந்தேகம்..... (என்னடா உனக்கு சந்தேகம் நாயே................)

இல்ல... சிப்பாய் புரட்சி ஏற்பட யார் காரணம் ??? வெள்ளைகாரன் மனைவி... (டேய்.......%$#^$@!#$$%#$*&^%$)

சரி சரி...... நோ கோவம் ப்ளீஸ் ........ எல்லோரும் வந்து என்னை காரி துப்பி ஆசீர்வாதம் பண்ணுக......