Tuesday, July 16, 2013

படித்ததில்... பிடித்தது... - 4

தான் மாற வேண்டும் என்று எவர் ஒருவராலும் அடுத்தவரை ஏற்றுக்கொள்ள வைக்க முடியாது. மாற்றம் என்னும் ஒரு கதவை நாம் ஒவ்வொருவரும் காவல் காத்து வருகிறோம். உள்ளிருந்து மட்டுமே அக்கதவை திறக்க முடியும். விவாதத்தின் மூலமாகவோ அல்லது உணர்ச்சிமயமான கோரிக்கையின் மூலமாகவோ இன்னொருவரின் கதவை நம்மால் திறக்க முடியாது.

- மர்லின் ஃபெர்கூசன்


Monday, July 15, 2013

படித்ததில்... பிடித்தது... - 3

நாம் சுலபமாக கைவசப்படுதுகின்ற விஷயங்களை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். 
ஒரு பொருள் எவ்வளவு அரிதாக இருக்கிறதோ அதைப் பொறுத்தே அதன் மதிப்பு அதிகரிக்கிறது.

- தாமஸ் பெயின்.


Monday, June 17, 2013

எடுத்ததில்... பிடித்தது... - 1

சாடிவயல் செக் போஸ்ட், சிறுவாணி.






Saturday, June 8, 2013

படித்ததில்... பிடித்தது... - 2

நாம் வாழும் இப்பிரபஞ்சத்தில் புவிஈர்ப்பு விசை விதி போல பல விதிகள் இருக்கின்றன. நீங்கள் ஒரு கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதித்தால், நீங்கள் நல்லவராக இருந்தாலும் சரி, தீயவராக இருந்தாலும் சரி, நிலத்தில் வந்து விழப் போவது நிச்சயம்.

- இரகசியம், ரோன்டா பைர்ன்


Tuesday, June 4, 2013

படித்ததில்... பிடித்தது... - 1

பெரும்பாலான மக்கள் தங்களுக்கு என்ன வேண்டாம் என்பதைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். பின்னர் மீண்டும் மீண்டும் அந்த வேண்டாத விசயங்களே ஏன் வருகின்றன என்று வியந்து கொண்டிருக்கின்றனர்.
தாங்கள் விரும்பியவற்றை மக்கள் பெறாதிருப்பதக்கு ஒரே காரணம் அவர்கள் தங்களுக்கு எது வேண்டும் என்பதைவிட, தங்களுக்கு எது வேண்டாம் என்பதை குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டிருப்பதுதான். நீங்கள் சிந்திக்கும் எண்ணங்களை உற்று கவனியுங்கள். நீங்கள் சிந்தும் வார்த்தைகளை உன்னிப்பாக கேளுங்கள். இந்த விதி முழுமையானது.எவ்வித தவறுகளுக்கும் இங்கு இடமில்லை.

மனிதகுலம் இதுவரையில் சந்தித்த எந்தவொரு கொள்ளை நோயைக் காட்டிலும் படுமோசமான தொற்றுநோய் ஒன்று பல நூற்றாண்டுகளாக நம்மிடையே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. அதுதான் "எனக்கு வேண்டாம்" என்னும் தொற்றுநோய். தங்களுக்கு எது வேண்டாம் என்பதை குறித்து சிந்தித்துக் கொண்டு, பேசிக் கொண்டு, செயல்பட்டுக் கொண்டு தங்களது கவனம் முழுவதும் அதில் குவித்துக் கொண்டு இருப்பதன் மூலம் மக்கள் இந்த தொற்றுநோயை பேணி வளர்கின்றனர்.

- இரகசியம், ரோன்டா பைர்ன்.


Monday, June 3, 2013

மப்புடன் எழுதியது - 7

ரொம்ப தூரம் டூ வீலர்ல போகணும்னு ரொம்ப நாளாக நினச்சுட்டு இருந்தேன். நேத்து மதியத்துக்கு சாப்பிட்டதுக்கு அப்புறம், என் சிங்கம் (தண்டர் பறவை) எடுத்துட்டு எங்கே போறதுன்னு தெரியல, ஒரே குழப்பமா இருந்தது .... 

கிழக்கு பக்கம் போக முடியாது, போன ஈரோடு தான் போகணும். தெக்க பக்கம் போன பொள்ளாச்சி தான் போகணும். வடக்க பக்கம் மேட்டுபாளையம் இல்ல மேக்க பாலக்காடு இப்படி எதாவது ஒரு இடத்துக்கு  போகணும்னு முடிவு பண்ணினேன். சரி சாப்பிட எதாவது வாங்கிட்டு போகலாம்னு வண்டிய நேரா மெக்டொனால்க்கு விட்டேன். அங்கே ஒரு மீடியம் சைஸ் கோக் (ஐஸ் நிறைய போட்டு) & வெஜ் பர்கர், ரெண்டு ஸ்மால் பிரெஞ்சு குச்சிய வாங்கிட்டு வெளியே வந்தேன். 

அப்போ தான் எனக்கு உள்ளே இருக்குற நல்லவன் வெளியே எட்டிப்பாதான்.  வண்டி நேர டாஸ்மாக் போச்சு, ஒரு கோட்டர் RC வாங்கிட்டு எல்லாத்தையும் நல்லா சைடு பைல போட்டு முதுகுல மாட்டிட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணி, நல்லவன் கூட சிறுவாணி போனேன்.

பேரூர் தாண்டியவுடன், லேசா தூறல் மழை, சில்லுனு காத்து, ரோட்டுல அதிகம் ஆள், வண்டி நடமாற்றம் இல்லை, 40 டு 50 KM ஸ்பீட்ல, என்ஜாய் பண்ணிட்டு போனேன். கூட ஒரு பிகர் இருந்தா இன்னும் என்ஜாய் தான்.

ஒரு மணி நேரம் டிரைவ் பண்ணி, சாடிவயல் செக் போஸ்ட்க்கு போனேன். அங்கே பெரிய அறிவிப்பு தொங்கிட்டு இருந்தது " இன்று விடுமுறை". சரி அப்படியே திருப்பிட்டு, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க ஒரு இடம் தேடினேன். அதுதான் இது.




கண்ணுக்கு முன்னாடி, பெருசா மழை பெய்யுது ஆனா நான் நின்னுட்டு இருக்குற இடத்துல லேசா தூறல் மட்டும், அமைதியான இடம், மழை பெய்யும் சத்தம் மட்டும் கேக்குது.

சிங்கம் மேல ஏறி உக்காந்து, தங்க ராஜாவா இந்த ஒரு கிளு கிளுப்பான நேரத்துல மெதுவா, சில நேரத்துல அழுத்தமா, பிரெஞ்சு கிஸ் கொடுத்துட்டு என்ஜாய் பண்ணினேன். அதுக்குள்ள நல்லவன் என் முதுக சொரிய ஆரம்பிச்சான். சில்லுனு இருந்த கோக் கொஞ்சம் பூமிக்கு தானம் பண்ணிட்டு அதுல கோட்டர் RCய அப்படியே கலந்தேன். பிரெஞ்சு குச்சிய எடுத்து வெச்சு, ஒரு வாய் குடிச்சேன். 





என்ன ஒரு சுகம் ....... 
என் வாழ்க்கைல இப்படி ஒரு சூழ்நிலைல சரக்கு அடிச்சது இல்லை :)

அப்படியே, மழை பெய்யறது, நிக்கறது, காத்து வீசறது, இந்த ஆட்டத்தை ஒரு மணி நேரம் பாத்துட்டு, வாங்கிட்டு வந்தது எல்லாம் தின்னு புட்டு கிளம்பினேன்.

கொடுமை ஏன் இன்னும் இளமையா இருக்குதுன்னு இப்போ தான் தெரியுது :)))


Sunday, May 26, 2013

மப்புடன் எழுதியது - 6

பனியன், ஜட்டில ஓட்டை இருந்த வெளிய தெரியமா இருக்க நாம பான்ட் சட்டை போட்டுகுறோம்.

அது மாதிரி தான் அவனவன் கஷ்டம் அவனுக்கு தான் தெரியும். அடுத்தவனுக்கு தெரியாது.

இது தான் வாழ்கை

# நேத்து சரக்கு அடிக்கும் போது, உதிர்ந்த தத்துவம் :)))