Wednesday, April 27, 2011

மாலுமி ஓர் அறிமுகம்

வணக்கம் மச்சிகளா,

என் பெயர் மாலுமி, இந்த பெயர் வர காரணம் நான் ஒரு ப்ரபஷ்னல் குடிகாரன். எபோதுமே தண்ணில இருப்பேன் (அதிகம் இல்லை ஜெண்டில் மேன் தினம் இரண்டு பெக் தான்), அதுனால...... (டேய்... டேய்... நிறுத்து.... இப்போ நீ என்ன சொல்ல வர....)

மச்சி ஒரு குவட்டேர் ஒன்னு சொல்லு......... (அட..... தூ தூ தூ தூ......பன்னாட பரதேசி நாயே.....)

மச்சி துப்பறதா இருந்தா மூஞ்சில துப்பு தலைல துப்பாத, ஏன்னா மூஞ்சில துப்புனா தொடசுகலம் தலைல துப்புனா குளிகோணும் அதுனால தான். (டேய்........$#@%#^%$^%&.........சரி மேல சொல்லு....)

இந்த பதிவுலகில் உள்ளே வர காரணம் நமது பதிவுலக டான் மதிப்பிற்குரிய பட்டாபட்டி அவர்கள் தான்.

பட்டா னா.... வணக்கமுங்க.......

அவரின் ஹோர்லிக்ஸ் பாட்டேல் பதிவை படுச்சுட்டு, நான் ஆபிசில் தனியாக விழுந்து விழுந்து சிரிக்க அதை எல்லோரும் ஒரு மாதிரியாக பார்க்க அதை நான் சமாளிக்க பட்ட பாடு எனக்கு தான் தெரியும். அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும். அதன் பிறகு தான் பதிவுகளை படித்து என் ஆபீஸ் டென்ஷன் கம்மிய இருக்குது. 
(அப்படியா... சரி அப்புறம் என்ன ?????)

அப்புறம் என்ன............ குரு வணக்கம் தான்

என் குரு வணக்கம் - டெரர் கும்மிக்கு

(அவர்கள தான் நான் என்னோட முதல் பதிவு போட முடிச்சது, எனக்கு தமிழ்ல எப்படி டைப் பண்ணுறதுனு கைய புடுச்சு கத்து கொடுத்தது, ட்ரவுசர் கழுட்டி அடிச்சது முதல் $%#  &*@ வரை எல்லாமே டெரர் கும்மி குரூப்ல இருக்குற அந்த 32 பேர் தான், அதுல முக்கியமா டெரர், பன்னிகுட்டி, போலீசு, பாபு, மாணவன், வைகை, வெறும்பய, நரி, மங்குனி, எஸ்.கே., சௌந்தர், அருண், செல்வா, MLA, கார்த்திக்  போன்ற பல நாதாரிகளும் வெங்கட், பெ.சொ.வி. மாதவன் போன்ற பல நல்லவர்களும்)

இது டெரர் கும்மி நாதாரிக்களுக்காக.........

கவுரமான வேலை, நிரந்தர வருமானம் தவிர படை எடுப்பின்போது அடிக்கப்படும் கொள்ளையில் பங்கு போன்றவை தான் ஆரம்ப காலத்தில் இந்திய மக்களை ராணுவத்துக்கு ஈர்த்தது. பின்னாளில் சட்ட திட்டம், வரைமுறை என்று ராணுவம் பல கட்டுப்பாடுகள் கொண்டதாக வகுக்கப்பட்டது. கிழக்கு இந்திய நிறுவனத்தின் சிப்பாயாக இருப்பது குடும்பத்தில் மகிழ்ச்சியும் பெருமைகுரியதகவும் மாறிப்போனது. இதனால் அடுத்தத்அடுத்த தலைமுறை தலைமுறையாக தாத்தா, அப்பா, மகன் என்று நிறுவனத்தில் சிப்பாயாக இடம் பெற்றார்கள் அதற்காக போட்டியும் போட்டார்கள்.

அப்போதைய வெள்ளைகரர்களும் தங்களின் கீழ் பணியாற்றிய சிப்பாய்களுடன் நெருக்கமாக அன்புக்காட்டி பழகினார்கள். இதனால் புல்லரித்துப்போன சிப்பாய்களின் கடமையுணர்வும் விசுவாசமும் எல்லையில்லாமல் போனது.

சாதரணமாகவே இந்திய மக்கள் நன்றியும் எஜமான் விசுவாசமும் கொண்டவர்கள். அதிகாரிகள் அளவுக்கு மீறி அன்பு காட்டினால் கேட்கவும் வேண்டுமா?. ஆற்காட்டின்  போரின் போது, ஒரு முறை ராஜா சாகிப்பின் முற்றுகையில் கிளைவ் படையில் உள்ளவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது சுதேசி சிப்பாய்கள் கிளைவ்விடம்  வந்து, "கேப்டன், உணவுப்பொருள் குறைகிறதே எப்படி சமாளிப்பது என கவலைப்படாதிர்கள். நாங்கள் வெறும் கஞ்சி குடித்தே பசி தீர்த்துக்கொள்வோம். நல்ல சாப்பாடை நீங்களும் உங்கள் பிரிட்டஷ் சிப்பாய்களும் சாப்பிடுங்கள்", என்று கூறினார்களாம்.

18 ஆம் நூற்றண்டு வரையில் இருந்த இதை நெருக்கமான உறவு 19 ஆம் நூற்றண்டின் தொடக்கத்தில் அதிகாரிகளின் மனைவிமார்களும் வந்து இந்தியாவில் குடியேற தொடங்கியதுமே காணாமல் போனது. இந்திய கறுப்பர்களுடன் தங்களின் கணவன்மார்கள் நெருங்கிப் பழகுவதை இங்கிலீஷ் பெண்கள் விரும்பவில்லை.

சீதாரம் பாண்டே என்கிற சிப்பாய் எழுதிய "நினைவு குறிப்புகளில்" ஒரு குறிப்பு இப்படி சொல்கிறது,
"முன்பெல்லாம் ஆபீசர்கள் சிப்பாய்களுடன் சேர்ந்து நாட்டிய நிகழ்சிகளில் பங்கு கொள்வார்கள். ஒன்றாக உட்கார்த்து உணவு அருந்துவார்கள், வேட்டைக்கு செல்வார்கள், விளையாடுவார்கள். இப்போது அருகிலேயே வருவது இல்லை. எல்லாம் அவர்களின் மனைவிமார்கள் போதனை"

( நன்றி! திரு. உமா சம்பத் - 1857 சிப்பாய் புரட்சி (பக்கம் 56 - 57)

மச்சிகளா, எனக்கு ஒரு சந்தேகம்..... (என்னடா உனக்கு சந்தேகம் நாயே................)

இல்ல... சிப்பாய் புரட்சி ஏற்பட யார் காரணம் ??? வெள்ளைகாரன் மனைவி... (டேய்.......%$#^$@!#$$%#$*&^%$)

சரி சரி...... நோ கோவம் ப்ளீஸ் ........ எல்லோரும் வந்து என்னை காரி துப்பி ஆசீர்வாதம் பண்ணுக......

59 comments:

பட்டாபட்டி.... said...

ஆகா.. என்னப்பார்த்து கெட்டுப்போன பயலுகளா?..

ஹா..ஹா..

அடிச்சு ஆடு மாப்ளே...

TERROR-PANDIYAN(VAS) said...

எங்களுடன் சேர்ந்து இந்த ப்ளாக் உலகை நாசமாக்கா இன்னும் ஒரு நாதாரி வந்து இருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்... :)

மாணவன் said...

வாழ்த்த வயதில்லை வணங்கி வரவேற்கிறேன்..... :))

Anonymous said...

ஆஆஹா ..ஆஹா ..,இன்னொரு ஆடு தலையை நீட்டுதே

Anonymous said...

ப்ளாக் உலகுக்கு வருக வருக என வரவேற்கிறேன் !!!!!

Madhavan Srinivasagopalan said...

முதல் பதிவிற்கு வாழ்த்துக்கள்..

அட.. எஸ்.கே எப்போ 'நாதாரி' லிஸ்டுல.. -- அச்சுப் பிழையோ ?

எனக்கு கௌரவமான பதவி தந்தமைக்கு நன்றி..
(இவ்ளோதான் எனக்குத் துப்பத் தெரியும்..

Anonymous said...

///// பட்டாபட்டி.... said...
ஆகா.. என்னப்பார்த்து கெட்டுப்போன பயலுகளா?..

ஹா..ஹா..

அடிச்சு ஆடு மாப்ளே... /////

யோவ் பட்டு ..,உன்னோட ரீச் என்னனே தெர்லையா உன்னக்கு ..,அன்னை உன்னோட செல்வாக்க பார்த்துட்டு ..,ministry ல இடம் பார்கிராங்கனா பார்த்துகோயேன் !!

சௌந்தர் said...

நல்லா ஒழுங்கா தானே பதிவு எழுதினீங்க என்ன திடீர் நல்ல பதிவர் மாதரி நல்ல தகவல் சிப்பாய் புரட்சி ஆரம்பிக்குறீங்க...

Anonymous said...

மச்சி ..ரெண்டாவது பத்திய பார்த்தேன் ..,நிறைய
பிலா''சப்பி '' பேசுறே ..,

சௌந்தர் said...

யாரப்பா இந்த பதிவுக்கு பட்டி டிங்கரிங் பார்த்தது....

சௌந்தர் said...

வாழ்த்துக்கள் மச்சி மேலும் மேலும் பல பதிவுகளை போட்டு பதிவுலகத்தை வளர்ப்போம்

Anonymous said...

////// சிப்பாய் புரட்சி ஆரம்பிக்குறீங்க.../////

புரட்சியை பற்றி நாங்கள் வினவ போகிறோம் !!!!! தயாரா

சௌந்தர் said...

மாணவன் said...
வாழ்த்த வயதில்லை வணங்கி வரவேற்கிறேன்..... :))///

டேய் இப்படியே எல்லாரையும் சொல்லு..... உன்னை விட சின்ன பையன் தான் மாலுமி உனக்கு ரெண்டு கல்யாணம் ஆகிருச்சி ஆனா மலுமிக்கு ஒன்னு கூட ஆகல

Anonymous said...

///// சிப்பாய் புரட்சி ஏற்பட யார் காரணம் ??? /////

சோற ஒழுங்க போட்ட என் புரட்சி பண்றான் நாதாரி

Anonymous said...

சரியாக இந்த நிமிடம் ..,நரியின் கார் சர்ரென்று வெளியே செல்கிறது ..,( ஆணிடா டேய் )

karthikkumar said...

வாங்க மாம்ஸ் வாங்க ...:)) கும்மியடித்து பதிவுலகை மெருகேற்ற தங்கள் தளம் ஒரு சிறப்பான இடமாய் அமையும் ..ஹி ஹி ..

karthikkumar said...

புரட்சியை பற்றி நாங்கள் வினவ போகிறோம் !!!!! தயாரா///
//வினவ// என்னது இங்கயும் வினவா .... நான் வரல ...:((

karthikkumar said...

மாணவன் said...
வாழ்த்த வயதில்லை வணங்கி வரவேற்கிறேன்...///

@ மாலுமி மாம்ஸ் உங்களுக்கு இந்த சிம்பு ஆடு சிக்கிருக்கு .... இதை அருங்க முதலில் ....:))
தக்காளி எப்ப பாத்தாலும் வணக்கம் சொல்லிட்டே இருக்குது.....:))

@ சிம்பு மாட்டினியா மச்சி...:))

மாணவன் said...

// karthikkumar said...
மாணவன் said...
வாழ்த்த வயதில்லை வணங்கி வரவேற்கிறேன்...///

@ மாலுமி மாம்ஸ் உங்களுக்கு இந்த சிம்பு ஆடு சிக்கிருக்கு .... இதை அருங்க முதலில் ....:))
தக்காளி எப்ப பாத்தாலும் வணக்கம் சொல்லிட்டே இருக்குது.....:))

@ சிம்பு மாட்டினியா மச்சி...://

மச்சி ஒரு நிமிஷம்... போரத்துல நம்ம சேவை தடைப்படும் பரவாயில்லையா?? தக்காளி இனிமேல் அருக்குறதபத்தி யோசிப்பிங்க..... பிச்சுபுடுவேன் பிச்சு ராஸ்கல்ஸ்.. :))

இம்சைஅரசன் பாபு.. said...

மச்சி இனி தீய வேலை செய்யணும் சரியா ..?யோவ வேலை செய்யணும்ன்னு சொன்னது ப்ளாக் எழுதனும்ன்னு சொல்லுறேன் ..இந்த டெர்ரர் ப்ளாக் மாதிரி ..காற்று வாங்கிட்டு இருக்க கூடாது ...சரியா ...

மாணவன் said...

@மாலுமி மாமு

பதிவுலகில் தொடரட்டும் உங்கள் மகத்தான பணி.... :))

மாணவன் said...

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மாமு... :))

கோமாளி செல்வா said...

மாலுமி அண்ணன் வாழ்க .. ஹி ஹி ..

நாகராஜசோழன் MA said...

Test

மங்குனி அமைச்சர் said...

தலை விதி இப்படி இருந்தா அத யாரால மாத்த முடியும்..........

நாகராஜசோழன் MA said...

வாய்யா நீயும் பிரபல பதிவர் ஆகிட்டே!! பிரபல பதிவர் மாலுமி வால்க, வாள்க, வாழ்க!!!

மங்குனி அமைச்சர் said...

கடைய தொறந்து வச்சிட்டு அந்த நாதாரி எங்கைய்யா போனான் .............. யோவ் மாஸ்டர் ரெண்டு பீரு ஒரு சிக்கன் பிறை பார்சல்

மாலுமி said...

மச்சிகளா,
எல்லோருக்கும் நன்றி........
ஆபிசுல கொஞ்சம் ஆணி அதுனால லேட்....

கொஞ்சம் இருங்க மச்சி ஆணி முடிச்சுட்டு வரேன்

மாலுமி said...

/// பட்டாபட்டி.... said...ஆகா.. என்னப்பார்த்து கெட்டுப்போன பயலுகளா?..///
தல எப்படி இருக்குமோ அப்படி தான் வால் இருக்கும் தலிவா....

மாலுமி said...

///////////TERROR-PANDIYAN(VAS) said...

எங்களுடன் சேர்ந்து இந்த ப்ளாக் உலகை நாசமாக்கா இன்னும் ஒரு நாதாரி வந்து இருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்... :)///////////

மச்சி நைட் சரக்கு இருக்குதா ????

மாலுமி said...

/////////மாணவன் said...

வாழ்த்த வயதில்லை வணங்கி வரவேற்கிறேன்..... :))/////////

நன்றி மாணவன், அப்புடியே அந்த சைனா பிகரு கிட்ட என் அட்ரஸ் கொடுத்துடு

மாலுமி said...

பனங்காட்டு நரி said...

ப்ளாக் உலகுக்கு வருக வருக என வரவேற்கிறேன் !!!!!/////////

நன்றி மாமு..........

டேய் %$$%##$$$% உன் போன் நம்பர் என்னடா????

மாலுமி said...

Madhavan Srinivasagopalan said...

முதல் பதிவிற்கு வாழ்த்துக்கள்..

அட.. எஸ்.கே எப்போ 'நாதாரி' லிஸ்டுல.. -- அச்சுப் பிழையோ ?

எனக்கு கௌரவமான பதவி தந்தமைக்கு நன்றி..
(இவ்ளோதான் எனக்குத் துப்பத் தெரியும்..////////

நன்றி மாதவன் சார்

மாலுமி said...

சௌந்தர் said...

நல்லா ஒழுங்கா தானே பதிவு எழுதினீங்க என்ன திடீர் நல்ல பதிவர் மாதரி நல்ல தகவல் சிப்பாய் புரட்சி ஆரம்பிக்குறீங்க...//////////

நன்றி சௌந்தர்,

எவளவு நாலு நிகழ் காலத்துல மொக்கை போடுறது அதுனாலத்தான் பின்னோக்கி............

மாலுமி said...

karthikkumar said...

வாங்க மாம்ஸ் வாங்க ...:)) கும்மியடித்து பதிவுலகை மெருகேற்ற தங்கள் தளம் ஒரு சிறப்பான இடமாய் அமையும் ..ஹி ஹி ..//////////

நன்றி மாம்ஸ்........

கூட சேந்து கும்மி அடிப்போம்

மாலுமி said...

இம்சைஅரசன் பாபு.. said...மச்சி இனி தீய வேலை செய்யணும் சரியா ..?யோவ வேலை செய்யணும்ன்னு சொன்னது ப்ளாக் எழுதனும்ன்னு சொல்லுறேன் ..இந்த டெர்ரர் ப்ளாக் மாதிரி ..காற்று வாங்கிட்டு இருக்க கூடாது ...சரியா//////////

நன்றி மச்சி
இனி எல்லாம் வரலாறு தான்

மாலுமி said...

கோமாளி செல்வா said...

மாலுமி அண்ணன் வாழ்க .. ஹி ஹி ../////////

நன்றி செல்வா,

டேய் "ஒரு டவுட்டு ......." அப்படினு........

மாலுமி said...

நாகராஜசோழன் MA said...

வாய்யா நீயும் பிரபல பதிவர் ஆகிட்டே!! பிரபல பதிவர் மாலுமி வால்க, வாள்க, வாழ்க!!!//////////////

நன்றி MLA

மாலுமி said...

மங்குனி அமைச்சர் said...

கடைய தொறந்து வச்சிட்டு அந்த நாதாரி எங்கைய்யா போனான் .............. யோவ் மாஸ்டர் ரெண்டு பீரு ஒரு சிக்கன் பிறை பார்சல்//////////

நன்றி மங்கு,

வா மாமு வா........கிளப்ல ஒரு ரூம் புக் பன்னுடோய்.........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த கருமமா பிடிச்ச பதிவுக்கு நான் என்ன பண்ணனும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரக்கடிச்சு கவுந்திட்டியா மச்சி

மாலுமி said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த கருமமா பிடிச்ச பதிவுக்கு நான் என்ன பண்ணனும்?//////////////

நீ வழக்கம் போல வந்து காரி துப்பிட்டு போ மச்சி

மாலுமி said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரக்கடிச்சு கவுந்திட்டியா மச்சி////////

ஆமா மச்சி நேத்து நைட் புல் மப்பு அதுனால தான் இது..........

TERROR-PANDIYAN(VAS) said...

//எபோதுமே தண்ணில இருப்பேன் //

அப்போ தண்ணி பாம்பு, தவளை, ஆமை இப்படி ஏதாவது வை... மாலுமி கப்பல்ல தான் இருப்பான்... தண்ணில இல்லை... :))

மாலுமி said...

TERROR-PANDIYAN(VAS) said...

//எபோதுமே தண்ணில இருப்பேன் //
அப்போ தண்ணி பாம்பு, தவளை, ஆமை இப்படி ஏதாவது வை... மாலுமி கப்பல்ல தான் இருப்பான்... தண்ணில இல்லை... :)) ///////

ஆமா ஆமா இனிமே நான் "சரக்கு" பேரு வச்சுக்குறேன் சரியா?

பட்டாபட்டி.... said...

2ரமேஷ்-
இந்த கருமமா பிடிச்ச பதிவுக்கு நான் என்ன பண்ணனும்?
//

தீக்குளிச்சு உன் கற்பை காட்டு மாப்ளே..

( சாவுய்யா.. எனக்கூறியதாக அர்த்தம் கொள்ளலாகாது.. அப்படி அர்த்தம் கொண்டால்.. யோவ்.. சாவுய்யா..) ஹி..ஹி

TERROR-PANDIYAN(VAS) said...

//யோவ்.. சாவுய்யா..) //

இது பிற்காலத்தில் “நாண்டுகிட்டு சாகுடா நாயே” என்று மாறியதாக மொழி வல்லுனர்கள் கூறியதாக தெரிகிறது.

விக்கி உலகம் said...

பட்டாவோட மாணவரே வருக ஹிஹி!

பெசொவி said...

என்னை நல்லவங்க லிஸ்ட்ல சேர்த்துட்டதால துப்பத் தோணலை, எனவே வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன்!

பெசொவி said...

50!

பெசொவி said...

லேட்டா வந்தாலும் வடை எனக்கே!

மாலுமி said...

பட்டாபட்டி.... said...

2ரமேஷ்-
இந்த கருமமா பிடிச்ச பதிவுக்கு நான் என்ன பண்ணனும்?
//
தீக்குளிச்சு உன் கற்பை காட்டு மாப்ளே..
( சாவுய்யா.. எனக்கூறியதாக அர்த்தம் கொள்ளலாகாது.. அப்படி அர்த்தம் கொண்டால்.. யோவ்.. சாவுய்யா..) ஹி..ஹி/////////

போலீசு இதுக்கு நீ மூணு தடவ தூக்கு போட்டு சாகலாம்.........

டெரர், நரியோட காசுல உனக்கு தூக்கு கயறு வாங்கி கொடுபார்

மாலுமி said...

விக்கி உலகம் said...

பட்டாவோட மாணவரே வருக ஹிஹி!//////////

நன்றி விக்கி உலகம் அவர்களே............

மாலுமி said...

பெசொவி said...

என்னை நல்லவங்க லிஸ்ட்ல சேர்த்துட்டதால துப்பத் தோணலை, எனவே வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன்!//////////////

நன்றி PSV........

கும்மிகுள்ள வந்துடா துப்பிதானே ஆசீர்வாதம் பண்ணோணும் இது தானே முறை

மாலுமி said...

பெசொவி said...

லேட்டா வந்தாலும் வடை எனக்கே! ////////////

முதல் வடை வாங்கிய PSV வாழ்க வாழ்க வாழ்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

2ரமேஷ்-
இந்த கருமமா பிடிச்ச பதிவுக்கு நான் என்ன பண்ணனும்?
//

தீக்குளிச்சு உன் கற்பை காட்டு மாப்ளே..

( சாவுய்யா.. எனக்கூறியதாக அர்த்தம் கொள்ளலாகாது.. அப்படி அர்த்தம் கொண்டால்.. யோவ்.. சாவுய்யா..) ஹி..ஹி//

வாய்யா நாம செத்து செத்து விளையாடலாம்...

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

நான் கூட உன்னை வொர்க்கஹாலிக் னு நெனச்சேன் யா..அதையும் மீறி நீ ஒரு ஆல்கஹாலிக் னு நிரூபிச்சிட்ட..சீயர்ஸ் மாமா..

MANO நாஞ்சில் மனோ said...

காறி துப்பி ஆசீர்வாதம் பண்ணியாச்சு நல்லா இருடே மக்கா...

மாலுமி said...

/// MANO நாஞ்சில் மனோ said...
காறி துப்பி ஆசீர்வாதம் பண்ணியாச்சு நல்லா இருடே மக்கா... ///

லேட்டா வந்து காரி துப்பி ஆசிர்வாதம் பண்ணுனதுக்கு ரொம்ப நன்றி..........ஹி ஹி ஹி