Monday, May 16, 2011

இந்திய மகாராஜகளும் அவர்களின் ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் - பாகம் மூணு

பாகம் ஒன்னு - இங்க படிக்கலாம்....
பாகம் ரெண்டு  - இங்க படிக்கலாம்....



பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங்கின் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், அதி ஆடம்பரமானவை. தங்கம், வெள்ளியால் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டவை. ஒவ்வொரு காருக்கும்மென்றே தனித்தனியாக ஏராளமான நகைகள் இருந்தன. அந்தக் கார்கள் சர்வீஸ்க்கு விடும் போது, அதை சுற்றி ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருப்பார்கள். அவரது ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரின் நம்பர் 0 (பூஜ்யம்).

விஸியநகரம் (Vizianagaram) என்ற சிறிய சமஸ்தானத்தின் மகாராஜா, ஒவ்வொரு ஆண்டும் மக்கள் மத்தியில் பிரம்மாண்டமான ஊர்வலம் வருவார். நூறு கார்கள் அதில் கலந்து கொள்ளும். ஆனால் அவர் தான் காதல் வாகனமான, முற்றிலும் வெள்ளி முலாம் பூசப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் கம்பீரமான பவனி வருவார். அப்போது நூற்றுக்கணக்கான யானைகள் மலர் தூவி வரவேற்கும்.
 

பஹவல்பூர்  சமஸ்தான நவாபுக்கோ ஒரு விநோதப் பழக்கம் இருந்தது. அவர் ரோல்ஸ் ராய்ஸ் காரில் சாலைகளில் பவனி வருவதற்கு முன்பாக ஒருவர் இன்னொரு வாகனத்தில் "நவாப் வருகிறார்" என்று அறிவித்துக் கொண்டே செல்வார். மறுகணமே சாலையில் இருக்கும் மக்கள் எல்லோரும் முதுகை காட்டியப்படி திரும்பி விடுவார்கள். நவாப் கடந்து சென்ற பிறகு தங்கள் வேலைகளை தொடருவார்கள். கண்பட்டு விடக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடு.

 சைக்கிளின் கேரியரில் பிராய்லர் கோழிகளை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு செல்வர்களே, அது போல தன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் கோழி, ஆடு, மான்களைஎல்லாம் இறைச்சிக்காக கொண்டு செல்லும் பழக்கம் பம்பாயை சேர்ந்த அப்துல் அலி என்ற பெரும் பணக்காரருக்கு இருந்தது.

இப்படி ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் கௌரவத்தின் சின்னமாக கருதப்பட்டாலும் அதனை வைத்துக் கொண்டு நம் மகாராஜாக்கள் செய்த அட்டுலுலியங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. 1907 ஆம் ஆண்டிலிருந்து 1947 ஆம் ஆண்டுவரை பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை சுமார் 40,000. அதில் இந்தியாவில் விற்கப்பட்டவை சுமார் 1,000 கார்கள்.
 

மைசூர் மகாராஜா வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை 35. பாட்டியாலா மகாராஜாவிடம் இருந்த கார்களின் எண்ணிக்கை 38. அப்போது முதலிடம் நமது ஹைதராபாத் நிஜாம் ஓஸ்மான் அலிகான் தான். அவரிடம் இருந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50. ஹைதராபாத்துக்குள் முதன் முதலில் ரோல்ஸ் ராய்ஸ் காரின் வாசம் வீசியது 1912 ஆம் ஆண்டு. ஒஸ்மானின் தந்தை நிஜாம் மெஹபூர் அலிகான் 1911 ஆம் ஆண்டு ஒரு கார் ஆடர் செய்தார்.

"மஞ்சள் நிறத்தில் காரின் உடல் இருக்கட்டும். உள்ளே நான் உட்காருவதுக்கு இருக்கை சிம்மாசனம் போல அமைக்கப்பட்டிருக்க வேண்டும். காரின் முன் புறம் சமஸ்தானத்தின் சின்னம் இருக்கவேண்டும்." மெஹபூவின் விருப்பபடி கார் பயணத்திற்கு தயாராகி வந்தது. ஆனால் அதற்குள் அவரது வாழ்க்கைப் பயணம் முடிந்திருந்தது. அந்த மஞ்சள் நிற ரோல்ஸ் ராய்ஸ் ஒஸ்மானிடம் வந்து சேர்ந்தது.

கௌரவமாக அதனை வைத்துக்கொண்டார் ஒஸ்மான். எந்த விதக் கஷ்டமும் அதற்கு கொடுக்கவில்லை. அது பாட்டுக்கு அரண்மனையில் கார் ஷெட்டில் சிலை போல் நின்றது. எடுத்து ஓட்டினால் டயர் தேய்ந்து விடுமே. 1912 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை அந்த மஞ்சள் நிற ரோல்ஸ் ராய்ஸ் காரின் ஸ்பீடோமீட்டர் காட்டிய மைல்கள் வெறும் 347 தான்.

அதற்குப் பின்பும் ஒஸ்மான் ஒரு சில ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கினர். ஆனால் உபயோகிக்கவில்லை. பிற வகை கார்களையும் பல்வேறு மாடல்களில் நூற்றுக்கணக்கில் சேர்த்து வைத்திருந்தார். ஆனால் அவர் தான் பயணங்களுக்கு உபயோகித்து ஒரு பாடாவதி போர்டு கார் தான்.
(நன்றி : திரு. முகில் - அகம், புறம், அந்தப்புரம்)

இப்படி ரோல்ஸ் ராய்ஸ் கார் தான் டயரை இந்தியாவில் பதித்த வரலாறு இது. 1907 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை அதன் மொத்த தயாரிப்பில் 25% இந்தியாவில் விற்பனை ஆனது. இப்போது ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை இந்தியாவில்,
Rolls-Royce Ghost 6.5 Petrol MT – Rs. 2,50,00,000 (Ex -Showroom Price)
Rolls-Royce Phantom EWB 6.8 Petrol – Rs. 3,50,00,000 (Ex -Showroom Price)
Rolls-Royce Phantom Sedan 6.8 Petrol AT – Rs. 3,50,00,000 (Ex -Showroom Price)
Rolls-Royce Phantom Coupe 6.8 L Petrol AT – Rs. 4,00,00,000 (Ex -Showroom Price)
Rolls-Royce Phantom Drophead  Convertible Coupe 6.8 L Petrol AT – Rs. 4,20,00,000 (Ex -Showroom Price)
(ref. http://www.xprice.in/rolls-royce-cars-price-features-specifications-1617)

சரி சரி...... டென்ஷன் ஆகாதிங்க.....
நம்ப மகாராஜாக்கள் மக்கள் கட்டுற வரி பணத்துல தான் இந்த ஆட்டம். இதே அவங்க உழைத்து சம்பாரிச்சு அவங்க காசுல வாங்கிருந்த இந்த ஆட்டம் காணாம போயிருக்கும். என்ன பண்ணுறது தலை எப்படி இருக்குமோ வால் அப்படி தான் இருக்கும். என்னங்க புரியலையா அந்த காலத்துல மகாராஜாக்கள் ஆடுன ஆட்டம் இப்போ நம்ப அரசியல்வாதிகள் அப்படியே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தவறாம கடைபுடுச்சுட்டு இருகாங்க.  

அடுத்தது, ரெண்டு தலைப்புல தகவல்கள் திரட்டிட்டு இருக்கேன். அதுல ஒன்னு, உலகின் நம்பர் ஒன் பணக்கார மகாராஜா. ரெண்டாவது, மகாராஜாகளின் தினசரி வாழ்கை எப்படிப்பட்டது அதில் அந்தப்புரம் உள்பட கூடிய விரைவில்....

12 comments:

மாணவன் said...

வணக்கம் மாமு :)

மாலுமி said...

/// மாணவன் said...
வணக்கம் மாமு :) ///

வணக்கம் மச்சி........
வருக வருக வருக...

Madhavan Srinivasagopalan said...

அதிசயமான தகவல்கள்..
நன்றி.

மங்குனி அமைச்சர் said...

hai ......
yenga irunthuyyaa ivlo mettar pudichcha ????? good one

இம்சைஅரசன் பாபு.. said...

நான் இன்னைக்கு லேட் மக்கா ...ஹி ..ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் இன்னைக்கு லேட் மக்கா ...ஹி ..ஹி

மாலுமி said...

/// Madhavan Srinivasagopalan said...
அதிசயமான தகவல்கள்..
நன்றி. ///

நன்றி மாதவன் சார்.

மாலுமி said...

/// saro said...உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும். ///
நன்றி.........

மாலுமி said...

/// மங்குனி அமைச்சர் said...
hai ......
yenga irunthuyyaa ivlo mettar pudichcha ????? good one ///

தேங்க்ஸ் மச்சி........
ஹி ஹி ஹி.........
நிறைய புக் கொஞ்சம் இன்டர்நெட் ..............

மாலுமி said...

/// இம்சைஅரசன் பாபு.. said...
நான் இன்னைக்கு லேட் மக்கா ...ஹி ..ஹி ///

வா மச்சி வா

மாலுமி said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நான் இன்னைக்கு லேட் மக்கா ...ஹி ..ஹி ///

எரும மாடு........ நானே காப்பி பேஸ்ட் போட்டு காலத்த ஓட்டிட்டு இருக்கேன்.
இதுல நீ எதுக்கு என் வேலைய பண்ணுற????

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

படிக்கிற காலத்தில ஒழுங்கா படிக்காம இப்ப படிச்சி போஸ்ட் டா போட்டு தாலி அறுக்கிறியே ஏன் மாமா..(ஹி..ஹி..இருந்தாலும் நீ கண்டினியூ பண்ணு..எவன் எவனோ எதை எதையோ எழுதுறான்..நீ எழுதக்கூடாதா..)