Sunday, March 18, 2012

உலகின் ஏழாவது பெரிய வைரம் - பாகம் ரெண்டு

பாகம் ஒன்னு - இங்கே படிக்கலாம். 

மிக தாமதமாக இந்த பதிவை போட்டதுக்கு.... மன்னிக்கவும்.... ஓவர் ஆணி...அதுனால தான் முடியல...
இப்போ கதைக்கு போவோம்.

ஜேக்கப் கிளம்பின பிறகு, நிஜாமின் உதவியாளர் டெனிஸ் பேச ஆரம்பித்தார். "நிஜாம், நம்முடைய கஜானாவில் ஏகப்பட்ட நகைகள் குவிந்து  கிடைகின்றன. அதுவும் இல்லாமல் உலகிலேயே அதிக வைரக் கற்கள் உங்களிடம் தான் இருக்கின்றன. ஆகவே, எதற்காக மேலும் ஒன்றை தேவையில்லாமல் அதிக விலை கொடுத்து வாங்க
வேண்டும்..." சிறிது யோசித்த நிஜாம், ".....ம், நீ சொல்லுவதும் சரி தான் " என்று  சொல்லிவிட்டு நகர்ந்தார்.

ஜேக்கப், நிஜாமின் வார்த்தைகளை நம்பி, தன் பணம் 23 லட்சத்தை இங்கிலாந்து வியாபாரி கணக்கில் கட்டி, அந்த வைரக்கல்லை வரவழைத்தார். அதை எடுத்துக்கொண்டு சௌமஹால்லா அரண்மனைக்கு சென்றார். அங்கு நிஜாமை பார்த்து பெருமையுடன் அந்த அசல் வைரக்கல்லை நீட்டினார்.

நிஜாம் அதைப்பர்த்து என்னவென்று கேட்டார். " நிஜாம் சில மாதத்துக்கு முன் இங்கே வந்து காண்பித்தேனே, இது அசல் வைரக்கல். இங்கிலாந்து இருந்து வரவழைத்துள்ளேன். "அதனை அலட்சியமாக கையில் வாங்கிப்பார்த்து, " இது, நீர் காட்டிய மாதிரி வைரக்கல்லின் வடிவத்தில் இல்லையே, இது வேறு மாதிரியாக இருக்கிறது. இது எனக்கு வேண்டாம்." என சுருக்கமாக முடித்துக்கொண்டார் நிஜாம்.

ஜேக்கப்க்கு தூக்கி வாரிப்போட்டது. மறுபடியும் பேசிப்பார்த்தார், கெஞ்சிப்பார்த்தார். நிஜாம் கண்டுக்கொள்ளவில்லை. காற்று இறங்கிய பலுனாக ஜேக்கப் சௌமஹால்லா அரண்மனையை விட்டு வெளிய வந்தார். வேறு வழியில்லை, இங்கிலாந்து வியாபாரிடம் பேசிப்பார்க்க வேண்டும். " ஐயா, வியாபாரம் ஊத்திகிச்சு. என்னோட பணத்தை தயவுசெஞ்சு திருப்பிகொடுங்க. நானும் வைரத்தை திருப்பி அனுப்பி வைக்கிறேன்." என்று சொல்லி, கெஞ்சி, அழுதும் பார்த்தார். அந்த இங்கிலாந்து வியாபாரி நம்பவில்லை. ஜேக்கப் மீது பிராது கொடுத்துவிட்டார். " அந்த ஆளு என்னோட வைரக்கல்லை வித்து தர்றதா சொல்லிட்டு, இப்போ ஆட்டைய போட பாக்குறான். "

1891 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜேக்கப் கைது செய்யப்பட்டார். அவர் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வைரம் பறிமுதல் செய்யப்பட்டு, கல்கத்தாவில் ஒரு வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. வழக்கு விசாரணை கல்கத்தா உயர் நீதி மன்றத்தில் விசாரனைக்கு வந்தது. அதில் ஹைதராபாத் நிஜாம் மெஹ்பூப் அலிகானும் விசாரனையில் ஒரு சாட்சியாகவும், கல்கத்தா உயர் நீதி மன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு நிஜாம், " இந்த ஒன்னும் இல்லாத மேட்டருக்கு எல்லாம் நான் கோர்ட் கூண்டுல ஏறி நிக்கமுடியாது. என் கௌரவம் என்ன ஆகுறது?. நான் அங்கே வரணும்னா, என் கூட என் மனைவிகள், துணைவிகள், வெச்சுகிட்டது அப்புறம் அப்படி இப்படினு ஒரு ஆயிரம் பேரு வருவாங்க. அதுக்கு செலவெல்லாம் யாராவது கொடுபங்களா?." இந்த கேள்வி கேட்டு, தனக்கு பதிலாக தன் உதவியாளர் டெனிஸ்சை கல்கத்தாவுக்கு அனுப்பி வைத்தார்.

கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் விசாரணை முடிவில், "எங்க நிஜாம் இந்த கேஸ்க்கு கண்டிப்பாக சாட்சி சொல்லணும்னா, நீங்க ஹைதராபாத் சௌமஹால்லா அரண்மனைல நிஜாம் மெஹ்பூப் அலிகான் கிட்ட அப்பாய்மென்ட் வாங்கி வாக்குமூலம் வாங்கிகோங்க" என டெனிஸ் நீதி மன்றத்தில் கோரிக்கை வைத்தார். நிஜாம் நேரில் ஆஜர் ஆகாததை கண்டித்த நீதிமன்றம், அவர் சார்பாக ஆஜர் ஆன டெனிஸ் வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. நிஜாம் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரனைக்கு கண்டிப்பாக ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிஜாம் இதை கண்டுக்கொள்ளவில்லை.

"நீங்க என்னடா எனக்கு தீர்ப்பு சொல்லுறது ?. நான் சொல்லுறேன்டா தீர்ப்பு" என்று ஹைதராபாத்ல இருக்குற ஊர் பெருசுகளை எல்லாம் கூப்பிட்டு ஒரு கூட்டத்தை கூட்டினார். அதன்படி, வைரம் நிஜாமுக்கு சொந்தம். ஜேக்கப் நீதிமன்ற செலவு ஏற்றுக்கொள்ளப்படும். என்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. வைரத்தின் மீதி விலையான 23 லட்சத்தை நிஜாம் இங்கிலாந்து வியாபாரிக்கு செலுத்தினார். வைரம் நிஜாமிடம் வந்து சேர்ந்தது. அதை கையில் வாங்கிய நிஜாம்க்கு மனம் உறுத்தியது.

"என்னடா இது?  ராசி இல்லாத வைரம். என் மீது வழக்கு தொடுக்க வைத்த வைரம். வேண்டாம் என்றாலும், என்னிடம் வந்து ஒட்டிக்கொண்டது. இதை தூக்கி போடமுடியாது." என்று நினைத்து ஒரு பழைய துணி ஒன்றில் சுற்றி, பழைய செருப்புக்குள் தூக்கி போட்டார். அவர் இறுதி வரை, அந்த ஜேக்கப் வைரத்தை தம் கஜானாவில் சேர்க்கவே இல்லை.

அந்த ஜேக்கப் வைரத்தின் இன்றைய மதிப்பு 400 கோடி ரூபாய்கும் மேல். இப்போது இந்திய அரசின் வசம் உள்ளது. ஆனால் குப்பையை கூட பணமாக பார்க்கும் ஒஸ்மானுக்கு, ஜேக்கப் வைரத்தின் உண்மையான மதிப்பு தெரியவில்லை. செருப்பில் இருந்து தானே எடுத்தோம், ஏதோ சாதாரண கல் என நினைத்துவிட்டார். உலகின் ஏழாவது பெரிய வைரமான ஜேக்கப் வைரத்தை, ஒஸ்மான் டேபிள் வெயிட்டாக பயன்படுத்தி வந்தார்.
(நன்றி : திரு.முகில் - அகம்,புரம்,அந்தபுரம்)

இனி, அடுத்த பதிவு...நம்ம நாட்டு மகாராஜாக்களின் நல்ல காதல், கள்ள காதல், அந்தப்புரம் பற்றியது...கூடிய விரைவில்...

37 comments:

வைகை said...

மிக தாமதமாக இந்த பதிவை போட்டதுக்கு.... மன்னிக்கவும்.... ஓவர் ஆணி...//

நாங்க ஏதோ உன் பதிவை படிக்க சோறு தண்ணி இல்லாம இருந்த மாதிரி பில்டப் கொடுக்குற? :-)

வைகை said...

...இப்போ கதைக்கு போவோம்.
ஜேக்கப் கிளம்பின பிறகு, //


அது என்ன டாஸ்மாக்கா? நினைச்ச உடனே போறதுக்கு? கதைடா..கதை... :-)

வைகை said...

ஜேக்கப், நிஜாமின் வார்த்தைகளை நம்பி, தன் பணம் 23 லட்சத்தை இங்கிலாந்து வியாபாரி கணக்கில் கட்டி//

ஆங்..என்ன பெரிய யாவாரி? புண்ணாக்கு யாவாரி.... :-)

வைகை said...

காற்று இறங்கிய பலுனாக ஜேக்கப் சௌமஹால்லா அரண்மனையை விட்டு வெளிய வந்தார்///

பலூன்னா? நீ எத சொல்லுற? :-)

வைகை said...

இங்கிலாந்து வியாபாரிடம் பேசிப்பார்க்க வேண்டும். " ஐயா, வியாபாரம் ஊத்திகிச்சு. //

இதுக்குதான்..ஊருக்கே ஊத்தி கொடுக்குற வியாபாரம் பண்ணினான் ஊத்திகாதுல? :-))

வைகை said...

நான் அங்கே வரணும்னா, என் கூட என் மனைவிகள், துணைவிகள், வெச்சுகிட்டது அப்புறம் அப்படி இப்படினு ஒரு ஆயிரம் பேரு வருவாங்க.//

இது மறைமுகமா யாரையோ குத்துற மாதிரி இருக்கே? :-)

வைகை said...

இனி, அடுத்த பதிவு...நம்ம நாட்டு மகாராஜாக்களின் //

அப்ப என்னைப்பற்றி எழுதப்போறன்னு சொல்லு :-)

வைகை said...

நல்ல காதல், கள்ள காதல், அந்தப்புரம் பற்றியது...கூடிய விரைவில்//

இது நம்ம டெரர் பத்தியா :-)

இம்சைஅரசன் பாபு.. said...

நான் இங்க வரவே இல்லை ..........கொய்யால உன்னை யாரு பதிவு எழுத சொன்னது .......

மாலுமி said...

வைகை.... கொஞ்சம் கேப் விட்டு காரி துப்பு மச்சி :)

மாலுமி said...

/// வைகை said...
மிக தாமதமாக இந்த பதிவை போட்டதுக்கு.... மன்னிக்கவும்.... ஓவர் ஆணி...//
நாங்க ஏதோ உன் பதிவை படிக்க சோறு தண்ணி இல்லாம இருந்த மாதிரி பில்டப் கொடுக்குற? :-) ///ஏதோ ஒரு வியுகம் தான்..... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////உலகின் ஏழாவது பெரிய வைரம் - பாகம் ரெண்டு/////

இது என்ன பாகம் சார், நளபாகமா, கும்பிபாகமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மிக தாமதமாக இந்த பதிவை போட்டதுக்கு.... மன்னிக்கவும்.... ////

பாகம் ஒண்ணு போட்டு ரெண்டு வருசம் ஆகப்போகுது, இப்போ பாகம் ரெண்டு போட்டுட்டு. அது தாமதமா?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மிக தாமதமாக இந்த பதிவை போட்டதுக்கு.... மன்னிக்கவும்.... ////

பாகம் ஒண்ணு போட்டு ரெண்டு வருசம் ஆகப்போகுது, இப்போ பாகம் ரெண்டு போட்டுட்டு. அது தாமதமா?//


பயபுள்ளைக்கு இப்பதான் தெளியுது போல? :-)

மாணவன் said...

Follow up.......... :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மிக தாமதமாக இந்த பதிவை போட்டதுக்கு.... மன்னிக்கவும்.... ////

பாகம் ஒண்ணு போட்டு ரெண்டு வருசம் ஆகப்போகுது, இப்போ பாகம் ரெண்டு போட்டுட்டு. அது தாமதமா?//


பயபுள்ளைக்கு இப்பதான் தெளியுது போல? :-)//////

தெளிஞ்சிருச்சா?

ப.செல்வக்குமார் said...

// மிக தாமதமாக இந்த பதிவை போட்டதுக்கு.... மன்னிக்கவும்.... ஓவர் ஆணி...அதுனால தான் முடியல...
இப்போ கதைக்கு போவோம்.//

உண்மையிலேயே உங்களுக்கு மனசாட்சினு எதாச்சும் இருக்குதா ? :))

எஸ்.கே said...

அந்த வைரம் இப்ப மாலுமிகிட்ட இருக்கா?:-)

டிராகன் said...

//////// மிக தாமதமாக இந்த பதிவை போட்டதுக்கு.... மன்னிக்கவும்.... ஓவர் ஆணி...அதுனால தான் முடியல... ////////

ஓவர் பில்ட் அப் !! வேணாம் தம்பி //.அது என்ன ''' ஓவர் ஆணி'' ..,ஒரு பத்து ,பாய்ஞ்சு கிலோ இருக்குமா ?

டிராகன் said...

/////.நம்ம நாட்டு மகாராஜாக்களின் நல்ல காதல், கள்ள காதல், அந்தப்புரம் பற்றியது...கூடிய விரைவில்... ////////////

ஆவலுடன் எதிர் பார்த்து ..,காத்துகொண்டு இருக்கும் ஓட்டேரி நரி

மாலுமி said...

/// வைகை said...
...இப்போ கதைக்கு போவோம்.
ஜேக்கப் கிளம்பின பிறகு, //


அது என்ன டாஸ்மாக்கா? நினைச்ச உடனே போறதுக்கு? கதைடா..கதை... :-)///

எப்பவுமே அதே நினைப்பு தான்.........கஷ்ட காலம்.......டாஸ்மார்க்னா கைல முத்திரை குத்துற இடமா மச்சி ?

மாலுமி said...

///வைகை said...
ஜேக்கப், நிஜாமின் வார்த்தைகளை நம்பி, தன் பணம் 23 லட்சத்தை இங்கிலாந்து வியாபாரி கணக்கில் கட்டி//

ஆங்..என்ன பெரிய யாவாரி? புண்ணாக்கு யாவாரி.... :-)///

இல்ல இல்ல.......அவரு பீமு கோழி குஞ்சு வாங்கி, சோறு போட்டு, வளத்தி வித்து அதன் மூலம் சம்பாரிச்ச பெரிய வியாபாரி :)))

மாலுமி said...

///வைகை said...
காற்று இறங்கிய பலுனாக ஜேக்கப் சௌமஹால்லா அரண்மனையை விட்டு வெளிய வந்தார்///

பலூன்னா? நீ எத சொல்லுற? :-)///

நான் காஸ் பலூன்ன சொன்னேன். நீ எத சொல்லுற ?

மாலுமி said...

///வைகை said...
நான் அங்கே வரணும்னா, என் கூட என் மனைவிகள், துணைவிகள், வெச்சுகிட்டது அப்புறம் அப்படி இப்படினு ஒரு ஆயிரம் பேரு வருவாங்க.//

இது மறைமுகமா யாரையோ குத்துற மாதிரி இருக்கே? :-)///

யோவ்......தப்பான கண்ணோட்டத்துல பாக்காதே......நிஜாமுக்கு மனசு ரொம்ப பெருசு அதுனால அவரோட கு....கு....கு....குடும்பம் ரொம்ப பெருசுன்னு சொல்ல வந்தேன் :)

மாலுமி said...

/// வைகை said...
இனி, அடுத்த பதிவு...நம்ம நாட்டு மகாராஜாக்களின் //

அப்ப என்னைப்பற்றி எழுதப்போறன்னு சொல்லு :-) ///

ஆமா......அப்போ உனக்கு துணைவிகள், வெச்சுகிட்டது, வெக்காதது லிஸ்ட் கொடு :)

மாலுமி said...

/// வைகை said...
நல்ல காதல், கள்ள காதல், அந்தப்புரம் பற்றியது...கூடிய விரைவில்//

இது நம்ம டெரர் பத்தியா :-) ///

இன்னும் ரெண்டு, மூணு பேரு இருகாங்க :)))))))

மாலுமி said...

/// இம்சைஅரசன் பாபு.. said...
நான் இங்க வரவே இல்லை ..........கொய்யால உன்னை யாரு பதிவு எழுத சொன்னது ....... ///

அப்படியாவது இங்கே வந்துட்டு போனா......இவ்வளவு நாள் பூட்டி வெச்சுருந்த கடைல தூசி, ஒட்டறை எல்லாம் கொஞ்சம் சுத்தம் ஆகும்ல :)

மாலுமி said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////உலகின் ஏழாவது பெரிய வைரம் - பாகம் ரெண்டு/////

இது என்ன பாகம் சார், நளபாகமா, கும்பிபாகமா? ///

இல்ல..........கோட்டர் பாகம் :)))

மாலுமி said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மிக தாமதமாக இந்த பதிவை போட்டதுக்கு.... மன்னிக்கவும்.... ////

பாகம் ஒண்ணு போட்டு ரெண்டு வருசம் ஆகப்போகுது, இப்போ பாகம் ரெண்டு போட்டுட்டு. அது தாமதமா? ///

மப்பு தெளியரத்துக்கு கொஞ்சம் காலம் ஆகி விட்டது :)))

இனி, மப்புடன் பதிவு எழுதப்படும் :)))

மாலுமி said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மிக தாமதமாக இந்த பதிவை போட்டதுக்கு.... மன்னிக்கவும்.... ////

பாகம் ஒண்ணு போட்டு ரெண்டு வருசம் ஆகப்போகுது, இப்போ பாகம் ரெண்டு போட்டுட்டு. அது தாமதமா?//


பயபுள்ளைக்கு இப்பதான் தெளியுது போல? :-)//////

தெளிஞ்சிருச்சா? ///

ஆமா....கொஞ்சம் லைட்டா........வருஷ கடைசி பிரஷர்ல ஆபீஸ்ல போட்டு அடி அடின்னு அடிக்கறாங்க......அதுனால கொஞ்சம் தெளிவா இருக்குறேன் :)))

மாலுமி said...

/// மாணவன் said...
Follow up.......... :-) ///

அப்படியா.....அப்படியே ஒரு கோட்டர் & சைடு டிஷ் சொல்லிட்டு போறது :)

மாலுமி said...

/// ப.செல்வக்குமார் said...
// மிக தாமதமாக இந்த பதிவை போட்டதுக்கு.... மன்னிக்கவும்.... ஓவர் ஆணி...அதுனால தான் முடியல...
இப்போ கதைக்கு போவோம்.//

உண்மையிலேயே உங்களுக்கு மனசாட்சினு எதாச்சும் இருக்குதா ? :)) ///

அது என்ன பாரின் சரக்கா ???? தண்ணி ஊத்தி குடிக்கணுமா இல்ல அப்படியே ராவா குடிக்கனுமா ???

மாலுமி said...

/// எஸ்.கே said...
அந்த வைரம் இப்ப மாலுமிகிட்ட இருக்கா?:-) ///

அப்படி இருந்துச்சுனா.........நான் இந்நேரம் மல்லையா கூட உக்காந்து RC சரக்கு அடிச்சுட்டு இருப்பேன் :)))

மாலுமி said...

/// டிராகன் said...
/////.நம்ம நாட்டு மகாராஜாக்களின் நல்ல காதல், கள்ள காதல், அந்தப்புரம் பற்றியது...கூடிய விரைவில்... ////////////

ஆவலுடன் எதிர் பார்த்து ..,காத்துகொண்டு இருக்கும் ஓட்டேரி நரி ///

கவலையே படாதே மச்சி.........அது உன்னை பத்தி தான் :)))))))))

Boys said...

நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையதளதிட்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .

ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
http://www.YahooAds.in/publisher_join.php

TERROR-PANDIYAN(VAS) said...

உனக்கு எல்லாம் எதுக்குடா ப்ளாக்.. தூ :)

Vinoth Kumar said...

ஒரு சிறிய உதவி..

மின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டிருரிக்கிறேன்.

படித்து பார்த்து ஆவன செய்யுங்கள்

http://kannimaralibrary.co.in/power9/
http://kannimaralibrary.co.in/power8/
http://kannimaralibrary.co.in/power7/
http://kannimaralibrary.co.in/power6/
http://kannimaralibrary.co.in/power5/
http://kannimaralibrary.co.in/power4/
http://kannimaralibrary.co.in/power3/
http://kannimaralibrary.co.in/power2/
http://kannimaralibrary.co.in/power1/

நன்றி,
வினோத்.