நாம ராத்திரி பகல்னு பாக்காம,
டெய்லி சோறு போடுற கம்பனிக்காக
நன்றியுள்ள நாய் விட பத்து படிக்கு மேல உழச்சு,
உயிர் நண்பன் கூட திட்டாத வார்த்தைய,
கஸ்டமர் கிட்ட கை கட்டி நின்னு வாங்கி,
அத வெக்கம், மானம், சூடு, சொரண இல்லாம
மூஞ்சில எந்த வித ரியாக்சன் இல்லாம காமிச்சு,
அன்னைக்கு நைட் தண்ணியடுச்சு உள்ளே இருக்குற
பீலிங்க்ஸ் எல்லாம் தனியா கொட்டி,
அடுத்த நாள் புது பிரச்சனைய மதம் கொண்ட
யானை போல எதிர் கொள்ள ரெடி ஆகி,
கம்பெனிய டவலப் பண்ணிட்டு இருக்கோம்.
ஆனா .....
நாங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்சு கொடுக்குற காசுல,
external ஆடிட்னு சொல்லி,
போன வருஷம் MBA முடிச்சுட்டு வந்த கொளந்தைகள வெச்சு,
அதுக்கு ABCD ஒரு வாரம் சொல்லிக்கொடுத்து,
அதுக management கிட்ட இவனுக ABCD use பண்ணுறது தப்புன்னு சொல்லி, எங்களை ரெண்டு மாசம் சந்தேக கண்களோட வறுத்து எடுக்கறது எந்த விதத்துல நியாயம் ....... CMD அவர்களே.....
# External ஆடிட், அதோட ரிப்போர்ட் கொடுமைகள் ..... :(((
மொதல பழைய செருப்பு எடுத்து ...... என்னைய அடிக்கணும் ......
எதுக்கு அந்த கொழந்தைகளுக்கு ABCD சொல்லிக்கொடுத்த ????
No comments:
Post a Comment