Tuesday, June 4, 2013

படித்ததில்... பிடித்தது... - 1

பெரும்பாலான மக்கள் தங்களுக்கு என்ன வேண்டாம் என்பதைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். பின்னர் மீண்டும் மீண்டும் அந்த வேண்டாத விசயங்களே ஏன் வருகின்றன என்று வியந்து கொண்டிருக்கின்றனர்.
தாங்கள் விரும்பியவற்றை மக்கள் பெறாதிருப்பதக்கு ஒரே காரணம் அவர்கள் தங்களுக்கு எது வேண்டும் என்பதைவிட, தங்களுக்கு எது வேண்டாம் என்பதை குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டிருப்பதுதான். நீங்கள் சிந்திக்கும் எண்ணங்களை உற்று கவனியுங்கள். நீங்கள் சிந்தும் வார்த்தைகளை உன்னிப்பாக கேளுங்கள். இந்த விதி முழுமையானது.எவ்வித தவறுகளுக்கும் இங்கு இடமில்லை.

மனிதகுலம் இதுவரையில் சந்தித்த எந்தவொரு கொள்ளை நோயைக் காட்டிலும் படுமோசமான தொற்றுநோய் ஒன்று பல நூற்றாண்டுகளாக நம்மிடையே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. அதுதான் "எனக்கு வேண்டாம்" என்னும் தொற்றுநோய். தங்களுக்கு எது வேண்டாம் என்பதை குறித்து சிந்தித்துக் கொண்டு, பேசிக் கொண்டு, செயல்பட்டுக் கொண்டு தங்களது கவனம் முழுவதும் அதில் குவித்துக் கொண்டு இருப்பதன் மூலம் மக்கள் இந்த தொற்றுநோயை பேணி வளர்கின்றனர்.

- இரகசியம், ரோன்டா பைர்ன்.


4 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

இப்போ என்னாடா சொல்ல வர நீ? ஏதோ காமா பைல்வான் சோமா பைல்வான் சொன்னாருன்னு....

மாலுமி said...

/// TERROR-PANDIYAN(VAS) said...
இப்போ என்னாடா சொல்ல வர நீ? ஏதோ காமா பைல்வான் சோமா பைல்வான் சொன்னாருன்னு.... ///


இது ஒரு வகையான இலக்கியம்னு நினைச்சுட்டு படிச்சு போய் பொலப்ப பாரு :)))

வெளங்காதவன்™ said...

சாவு!

மாலுமி said...

/// வெளங்காதவன்™ said...
சாவு!///

தூக்கு கயுறு வேணுமா ........ பாலிடால் வேணுமா மச்சி ???