Friday, May 24, 2013

மப்புடன் எழுதியது - 5

பாசம் ....
வெக்கும் போது இருக்கும் சுகத்தை விட 
இழக்கும் போது ஏற்படும் வலி கொடுமையானது.

# விட்டுட்டு போய்டா :(((

Friday, May 17, 2013

நானும் எழுத போறேன் கவித ...



நானும் கவித எழுத போறேன் .....

தக்காளி ...... வெறும்பய எழுதுன எழுத்துக்கு ஏகப்பட்ட தோழிகள் கிடைச்சுட்டாங்க, அதுவும் சிங்கப்பூர், மலேசியா, சீனா, ஹாங்காங், தைவான் இப்படி ஏகப்பட்டது. 

இதுனால, நான் தண்ணியடுசுட்டு உளறுறது, டெரர் கும்மி நாதாரிகளுக்கு போன் பண்ணி வாந்தி எடுக்கறது எல்லாம் நின்னு போச்சு.

அதுனால, தமிழ்நாடு அரசுக்கு எந்தவித நஷ்டம் வந்திடக்கூடாதுனு ஒரு நல்லென்னதுக்காகவும், நான் போன் பன்னி பேசலனு மனசு பொக்குனு போன டெரர் கும்மி நாதரிகளுக்காகவும், என்னைய போல குடி மக்களுக்காகவும்  மற்றும் பதிவுலகம் நண்பர்களுக்காகவும் நான் இன்று முதல் சரக்கு அடித்துவிட்டு கவிதா ......... மனிக்கவும் கவித, தத்துவம் (டெரர் மக்களே, நம்ம தத்துவம் இல்ல), பொன்மொழிகள் போன்றவை இங்கே பகிரப்படும். அதை பார்த்து, படித்து பயன்பெறுங்கள். 

இதோ உங்களுக்கு ஒரு கவித ....


நன்றி 

இப்படிக்கு,

டாஸ்மாக் கவி மாலுமி.






நெற்றிப் புருவம் 
என் மூச்சை 
நிறுத்தும்..

ரத்த கீறல் 
என் இதயத்தில்..

சிரிக்கும் போது 
கன்னத்தில் 
விழவேண்டிய குழி..
என் இதயத்தில்..

மரணத்தை 
முழு மனதுடன் 
ஏற்றுக்கொண்டு 
கண்ணை மூடுகிறேன்...

யாரும் பார்க்காத 
ஒரு வெண்ணிலவைப் 
பார்த்து விட்டேனென்று........

Thursday, May 16, 2013

மப்புடன் எழுதியது - 4


நாம ராத்திரி பகல்னு பாக்காம, 
டெய்லி சோறு போடுற கம்பனிக்காக 
நன்றியுள்ள நாய் விட பத்து படிக்கு மேல உழச்சு, 
உயிர் நண்பன் கூட திட்டாத வார்த்தைய, 
கஸ்டமர் கிட்ட கை கட்டி நின்னு வாங்கி, 
அத வெக்கம், மானம், சூடு, சொரண இல்லாம 
மூஞ்சில எந்த வித ரியாக்சன் இல்லாம காமிச்சு, 
அன்னைக்கு நைட் தண்ணியடுச்சு உள்ளே இருக்குற 
பீலிங்க்ஸ் எல்லாம் தனியா கொட்டி, 

அடுத்த நாள் புது பிரச்சனைய மதம் கொண்ட 
யானை போல எதிர் கொள்ள ரெடி ஆகி, 
கம்பெனிய டவலப் பண்ணிட்டு இருக்கோம்.

ஆனா ..... 
நாங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்சு கொடுக்குற காசுல, 
external ஆடிட்னு  சொல்லி, 
போன வருஷம் MBA முடிச்சுட்டு வந்த கொளந்தைகள வெச்சு, 
அதுக்கு ABCD ஒரு வாரம் சொல்லிக்கொடுத்து, 
அதுக management கிட்ட இவனுக ABCD use பண்ணுறது தப்புன்னு சொல்லி, எங்களை ரெண்டு மாசம் சந்தேக கண்களோட வறுத்து எடுக்கறது எந்த விதத்துல நியாயம் ....... CMD அவர்களே.....


# External ஆடிட், அதோட ரிப்போர்ட் கொடுமைகள் ..... :(((
மொதல பழைய செருப்பு எடுத்து ...... என்னைய அடிக்கணும் ...... 
எதுக்கு அந்த கொழந்தைகளுக்கு ABCD சொல்லிக்கொடுத்த ????

Wednesday, May 15, 2013

பட்டா ...... ஐ லவ் யூ ......

முடிந்தது எல்லாம் முடிந்தது 
பட்டாப்பட்டியின் நக்கல், நையாண்டி 
ஆடு அறுப்பு எல்லாம் முடிந்தது 

காரமடை ஜோசியன் எங்கையோ 
ஓடிவிட்டான் போல நீண்ட நாட்களாக 
அவர் கடை பக்கம் காணோம் 

ஒரு வேளை இருந்திருந்தால் பதிவுலகம் 
இவ்வளவு கண்ணீரை சிந்திருக்காது 

இன்று காலை அங்கே பார்த்த பல 
பெரிய முகங்களை பார்த்தவுடன்
தான் தெரிந்தது 

நீ எனக்கு சொந்தம் என ...

இதுவரை இருவருக்கும் 
முகம் தெரியாது, உண்மையான பெயர் தெரியாது 
தெரிந்தது நட்பு, எழுத்து, பேச்சு 

நீ பதிவுலகை விட்டு சென்றதுக்கு அப்புறம் 
தெரிகிறது உன் வரலாறு எனக்கு 

என்ன கொடுமை இது .... :(((
இந்த வலி சாகும் வரை நிலைக்குமே :(((

பட்டா ...... ஐ லவ் யூ ...... 
இதுக்கு மேல் என்ன சொல்லுவதென தெரியவில்லை .........


Sunday, May 12, 2013

மப்புடன் எழுதியது - 3

எல்லோருக்கும் வணக்கம் .... :)

கடைசியா பதிவு எழுதி ஒரு வருஷம் ஆகிபோச்சு, அதுனால தான் துருபுடிச்சு கிடக்குற பூட்டை கஷ்டப்பட்டு (ப்ளாக் அட்ரஸ் மறந்து போச்சு ... ஹி ஹி ஹி ...) உடைச்சு, கடைய திறந்து, சுத்தமா கூட்டி பெருக்கி, ஒரு பூஜை போட்டு வெச்சுருக்கேன்.

நான் ஒரு வருசமா பதிவு எழுதாதனால, அந்த பசுமை டாக்ட்டறு கட்சில போய் சேந்துட்டு ரோடு ஓரத்துல இருக்குற மரத்தை வெட்டுற மாதிரி, என்னைய கண்டந்துண்டமா வெட்ட ரெடியா இருக்கறவங்களும், சாமிக்கு நெய், பால் அபிசேகம் பண்ணுற மாதிரி எனக்கு கண்டபடி காறி காறி துப்பி அபிசேகம் செய்ய ஆவலுடன் இருக்கும் டெரர் கும்மி நாதரிகளுக்கும், அம்மாவ பாத்த MLA மாதிரி கூனி குறுகி மன்னிப்பு கேட்டுக்குறேன்.

சரக்கு அடிக்கும் போது தான் நமக்கு சிந்தனைகள் புல்லா அடிச்சுட்டு வாந்தி எடுக்குற மாதிரி அருவியா கொட்டும். அப்படி ஒரு சிந்தனை, அதுதான் மப்பு சிந்தனை....

கொடுமைகள்
என்றும் இளமையாகவே 
இருக்கின்றன ...
எப்போது முதுமை 
அடையும் ???

அவ்வளவு தான்....இனி வாழ்த்து சொல்லுறவங்க, காறி துப்பறவங்க எல்லோரும் வந்து உங்க கடமைய செஞ்சுட்டு போங்க ...... :)
(அப்பாடி ..... இந்த வருசத்துக்கு ஒரு பதிவு போட்டாச்சு .....)

Sunday, March 18, 2012

உலகின் ஏழாவது பெரிய வைரம் - பாகம் ரெண்டு

பாகம் ஒன்னு - இங்கே படிக்கலாம். 

மிக தாமதமாக இந்த பதிவை போட்டதுக்கு.... மன்னிக்கவும்.... ஓவர் ஆணி...அதுனால தான் முடியல...
இப்போ கதைக்கு போவோம்.

ஜேக்கப் கிளம்பின பிறகு, நிஜாமின் உதவியாளர் டெனிஸ் பேச ஆரம்பித்தார். "நிஜாம், நம்முடைய கஜானாவில் ஏகப்பட்ட நகைகள் குவிந்து  கிடைகின்றன. அதுவும் இல்லாமல் உலகிலேயே அதிக வைரக் கற்கள் உங்களிடம் தான் இருக்கின்றன. ஆகவே, எதற்காக மேலும் ஒன்றை தேவையில்லாமல் அதிக விலை கொடுத்து வாங்க
வேண்டும்..." சிறிது யோசித்த நிஜாம், ".....ம், நீ சொல்லுவதும் சரி தான் " என்று  சொல்லிவிட்டு நகர்ந்தார்.

ஜேக்கப், நிஜாமின் வார்த்தைகளை நம்பி, தன் பணம் 23 லட்சத்தை இங்கிலாந்து வியாபாரி கணக்கில் கட்டி, அந்த வைரக்கல்லை வரவழைத்தார். அதை எடுத்துக்கொண்டு சௌமஹால்லா அரண்மனைக்கு சென்றார். அங்கு நிஜாமை பார்த்து பெருமையுடன் அந்த அசல் வைரக்கல்லை நீட்டினார்.

நிஜாம் அதைப்பர்த்து என்னவென்று கேட்டார். " நிஜாம் சில மாதத்துக்கு முன் இங்கே வந்து காண்பித்தேனே, இது அசல் வைரக்கல். இங்கிலாந்து இருந்து வரவழைத்துள்ளேன். "அதனை அலட்சியமாக கையில் வாங்கிப்பார்த்து, " இது, நீர் காட்டிய மாதிரி வைரக்கல்லின் வடிவத்தில் இல்லையே, இது வேறு மாதிரியாக இருக்கிறது. இது எனக்கு வேண்டாம்." என சுருக்கமாக முடித்துக்கொண்டார் நிஜாம்.

ஜேக்கப்க்கு தூக்கி வாரிப்போட்டது. மறுபடியும் பேசிப்பார்த்தார், கெஞ்சிப்பார்த்தார். நிஜாம் கண்டுக்கொள்ளவில்லை. காற்று இறங்கிய பலுனாக ஜேக்கப் சௌமஹால்லா அரண்மனையை விட்டு வெளிய வந்தார். வேறு வழியில்லை, இங்கிலாந்து வியாபாரிடம் பேசிப்பார்க்க வேண்டும். " ஐயா, வியாபாரம் ஊத்திகிச்சு. என்னோட பணத்தை தயவுசெஞ்சு திருப்பிகொடுங்க. நானும் வைரத்தை திருப்பி அனுப்பி வைக்கிறேன்." என்று சொல்லி, கெஞ்சி, அழுதும் பார்த்தார். அந்த இங்கிலாந்து வியாபாரி நம்பவில்லை. ஜேக்கப் மீது பிராது கொடுத்துவிட்டார். " அந்த ஆளு என்னோட வைரக்கல்லை வித்து தர்றதா சொல்லிட்டு, இப்போ ஆட்டைய போட பாக்குறான். "

1891 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜேக்கப் கைது செய்யப்பட்டார். அவர் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வைரம் பறிமுதல் செய்யப்பட்டு, கல்கத்தாவில் ஒரு வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. வழக்கு விசாரணை கல்கத்தா உயர் நீதி மன்றத்தில் விசாரனைக்கு வந்தது. அதில் ஹைதராபாத் நிஜாம் மெஹ்பூப் அலிகானும் விசாரனையில் ஒரு சாட்சியாகவும், கல்கத்தா உயர் நீதி மன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு நிஜாம், " இந்த ஒன்னும் இல்லாத மேட்டருக்கு எல்லாம் நான் கோர்ட் கூண்டுல ஏறி நிக்கமுடியாது. என் கௌரவம் என்ன ஆகுறது?. நான் அங்கே வரணும்னா, என் கூட என் மனைவிகள், துணைவிகள், வெச்சுகிட்டது அப்புறம் அப்படி இப்படினு ஒரு ஆயிரம் பேரு வருவாங்க. அதுக்கு செலவெல்லாம் யாராவது கொடுபங்களா?." இந்த கேள்வி கேட்டு, தனக்கு பதிலாக தன் உதவியாளர் டெனிஸ்சை கல்கத்தாவுக்கு அனுப்பி வைத்தார்.

கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் விசாரணை முடிவில், "எங்க நிஜாம் இந்த கேஸ்க்கு கண்டிப்பாக சாட்சி சொல்லணும்னா, நீங்க ஹைதராபாத் சௌமஹால்லா அரண்மனைல நிஜாம் மெஹ்பூப் அலிகான் கிட்ட அப்பாய்மென்ட் வாங்கி வாக்குமூலம் வாங்கிகோங்க" என டெனிஸ் நீதி மன்றத்தில் கோரிக்கை வைத்தார். நிஜாம் நேரில் ஆஜர் ஆகாததை கண்டித்த நீதிமன்றம், அவர் சார்பாக ஆஜர் ஆன டெனிஸ் வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. நிஜாம் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரனைக்கு கண்டிப்பாக ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிஜாம் இதை கண்டுக்கொள்ளவில்லை.

"நீங்க என்னடா எனக்கு தீர்ப்பு சொல்லுறது ?. நான் சொல்லுறேன்டா தீர்ப்பு" என்று ஹைதராபாத்ல இருக்குற ஊர் பெருசுகளை எல்லாம் கூப்பிட்டு ஒரு கூட்டத்தை கூட்டினார். அதன்படி, வைரம் நிஜாமுக்கு சொந்தம். ஜேக்கப் நீதிமன்ற செலவு ஏற்றுக்கொள்ளப்படும். என்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. வைரத்தின் மீதி விலையான 23 லட்சத்தை நிஜாம் இங்கிலாந்து வியாபாரிக்கு செலுத்தினார். வைரம் நிஜாமிடம் வந்து சேர்ந்தது. அதை கையில் வாங்கிய நிஜாம்க்கு மனம் உறுத்தியது.

"என்னடா இது?  ராசி இல்லாத வைரம். என் மீது வழக்கு தொடுக்க வைத்த வைரம். வேண்டாம் என்றாலும், என்னிடம் வந்து ஒட்டிக்கொண்டது. இதை தூக்கி போடமுடியாது." என்று நினைத்து ஒரு பழைய துணி ஒன்றில் சுற்றி, பழைய செருப்புக்குள் தூக்கி போட்டார். அவர் இறுதி வரை, அந்த ஜேக்கப் வைரத்தை தம் கஜானாவில் சேர்க்கவே இல்லை.

அந்த ஜேக்கப் வைரத்தின் இன்றைய மதிப்பு 400 கோடி ரூபாய்கும் மேல். இப்போது இந்திய அரசின் வசம் உள்ளது. ஆனால் குப்பையை கூட பணமாக பார்க்கும் ஒஸ்மானுக்கு, ஜேக்கப் வைரத்தின் உண்மையான மதிப்பு தெரியவில்லை. செருப்பில் இருந்து தானே எடுத்தோம், ஏதோ சாதாரண கல் என நினைத்துவிட்டார். உலகின் ஏழாவது பெரிய வைரமான ஜேக்கப் வைரத்தை, ஒஸ்மான் டேபிள் வெயிட்டாக பயன்படுத்தி வந்தார்.
(நன்றி : திரு.முகில் - அகம்,புரம்,அந்தபுரம்)

இனி, அடுத்த பதிவு...நம்ம நாட்டு மகாராஜாக்களின் நல்ல காதல், கள்ள காதல், அந்தப்புரம் பற்றியது...கூடிய விரைவில்...