Saturday, May 14, 2011

இந்திய மகாராஜகளும் அவர்களின் ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் - பாகம் ரெண்டு

பாகம் ஒன்னு - இங்க படிக்கலாம்....

அது என்ன கார், எங்கு கிடைக்கும், விலை எவ்வளவு இருக்கும் என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். "அதென்ன அவரால மட்டும் தான் வாங்க முடியுமா என்ன? நாங்களும் வாங்குவோம்ல" என்று தேடித் தேடி ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் சமஸ்தானத்தின் மகாராஜாவாகப்பட்டவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருந்தால்தான் கௌரவம் என்ற நிலை உருவானது. மகாராஜாக்களைத் தவிர, பணக்கரார்களும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க ஆரம்பித்தனர்.

அதனால் மகாராஜாக்களைத் தவிரவும் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை பெருகியது. என்ன செய்யலாம் என்று யோசித்த மகாராஜாக்கள், ஒன்றுக்கு மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை, தங்கள் விருப்பப்படி வடிவமைக்கச் சொல்லி ஆடர்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

விருப்பபடி என்றால்? பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் அலுமினியத்தால் செய்யப்பட்டன. அலுமினியமா சேச்சே, எனக்கு வெள்ளியால் செஞ்ச கார் வேணும். அந்த மகாராஜா வெள்ளிக்கார் வச்சுருகனா, அப்படினா எனக்கு தங்க முலாம் பூசிய கார் வேணும். இப்படி டிசைன் டிசைனாக யோசித்து படு ஆடம்பரமாக, கம்பீரமாக, தங்கள் விருப்பப்படி, வசதிப்படி ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இறக்குமதி செய்து, பிலிம் காட்டினார்கள்.

ஒருமுறை லண்டனில் இருந்த ரோல்ஸ் ராய்ஸ் இந்தியப் பிரிவு அலுவலகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. அதைப் பிரித்து பார்த்த ஊழியருக்கு கொஞ்சம் அதிர்ச்சி. காரணம் அதில் ஒரு செருப்பு இருந்தது. பிங்க் நிற வலது கால் செருப்பு. கூடவே ஒரு கடிதம்.

" இந்த செருப்பின் நிறத்தில் எனக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் உடனே தேவை. என் மகாராணிக்கு பரிசளிக்க விரும்புகிறேன். எப்போது கிடைக்கும்? "  - அனுப்பியிருந்தவர் ஜாம் நகர் சமஸ்தானத்தின் மகாராஜா.

பரோடா சமஸ்தானத்தின் மகாராணி சிம்னா பாயின் விருப்பம் வேறு மாதிரியானது. "காரில் நான் வசதியாக உட்காரவோ, படுக்கவோ ஒரு கேபின் வேண்டும். குஷன் எல்லாம் மொத் மொத்தென்று இருக்க வேண்டும். ஓட்டுனர் இருக்கையும் அந்த கேபினும் கண்ணாடியால் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்".

அல்வார் சமஸ்தானத்தின் மகாராஜா ஜெய்சிங் ஒருமுறை லண்டனில் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமுக்கு சென்றார். புதிதாக கார் வாங்குவதுதான் அவரது எண்ணம். ஆனால் அங்கிருந்த விற்பனைப் பிரதிநிதி அவரை சரியாக கவனிக்கவில்லை. அவர் மகாராஜா என்று விற்பனைப் பிரதிநிதிக்கு தெரியாது. "இந்த ஆளெல்லாம் எங்க கார் வாங்கப் போறான்" என்ற எண்ணம். ஜெய் சிங் கின் கேள்விகளுக்கு அலட்சியமாக பதில் சொன்னான்.

ஜெய்சிங் கடும் கோபக்காரர், விற்பனைப் பிரதிநிதி கூனிக் குறுகி மரியாதை கொடுக்கும்படியாக அந்த இடத்தில் ஆறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு ஆடர் கொடுத்தார். அவரது சமஸ்தானத்துக்கு ஆறு கார்களும் அனுப்பப்பட்டன. அவற்றை உபயோகப்படுத்த ஜெய்சிங்கின் ஈகோ ஒப்புக் கொள்ளவில்லை. விலை உயர்ந்த அந்த ஆறு கார்களும் சமஸ்தானத்தில் குப்பை அள்ளும் வண்டிகளாக பயன்படுத்த சொல்லி கட்டளையிட்டார். அவை நாறின.

நந்தகான் சமஸ்தான மகாராஜா சர்வேஸ்வர தாஸ் புலி வேட்டைப் பிரியர். அவரது ரோல்ஸ் ராய்ஸ் காரில் அடர்ந்த காடுக்குள் பதுங்கி இருக்கும் புலிகளை தேடுவதுக்கு ஏற்ற சிறப்பு விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. காரின் வெளியே பாதுகாவலர்கள் தொற்றிக் கொண்டு செல்வதுக்கென்ன வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இன்னொரு ரோல்ஸ் ராய்ஸ் காரின் மேல் கூரை வைக்கோலால் வேயப்பட்டிருந்தது.
(நன்றி : திரு. முகில் - அகம், புறம், அந்தப்புரம்)

பாத்திங்களா...
அந்த காலத்துல மகாராஜாக்கள் என்ன மாதிரி ஆடிருகாங்க, இன்னும் சில ஆட்டங்கள் கூடிய விரைவில்....

19 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

ஹி ..ஹி ..தெரியாத பல விஷயங்கள் இருக்கு ...நீ நடத்து மச்சி ....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அந்த காலத்துல மகாராஜாக்கள் என்ன மாதிரி ஆடிருகாங்க,
//

அந்த காலத்தில மட்டுமா?..

இப்ப மட்டும் என்ன வாழுது பாஸ்?..
(ராசாக்களும், ராணிகளும் ஆடும் ஆட்டம்...ஹி..ஹி)

மாலுமி said...

/// இம்சைஅரசன் பாபு.. said...
ஹி ..ஹி ..தெரியாத பல விஷயங்கள் இருக்கு ...நீ நடத்து மச்சி .... ///

மச்சி பாகம் மூணு படுச்சா காரி துப்புவ போல...........

மாலுமி said...

/// பட்டாபட்டி.... said..
அந்த காலத்துல மகாராஜாக்கள் என்ன மாதிரி ஆடிருகாங்க,
//
அந்த காலத்தில மட்டுமா?..
இப்ப மட்டும் என்ன வாழுது பாஸ்?..
(ராசாக்களும், ராணிகளும் ஆடும் ஆட்டம்...ஹி..ஹி) ///

ஹி ஹி ஹி ...........
இந்த தேர்தல்.......
ஆட்டம் ஆடியவர்களுக்கு பட்டாப்பட்டி கழுட்டி வீசப்பட்டது...
ஆட்டம் ஆடபோறவன்களுக்கு பட்டாப்பட்டியின் நாடா உருவப்பட்டது...
(ஆட்டம் ஆடினால் பட்டாப்பட்டி கழுண்டு விழும்)

மாணவன் said...

lunch time maamu :)

மாலுமி said...

/// மாணவன் said...
lunch time maamu :) ///

ஹி ஹி ஹி ....
மச்சி என்ன சொல்லுற ?????
யாருக்கு????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீ நடத்து மச்சி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மாலுமி said...
/// இம்சைஅரசன் பாபு.. said...
ஹி ..ஹி ..தெரியாத பல விஷயங்கள் இருக்கு ...நீ நடத்து மச்சி .... ///

மச்சி பாகம் மூணு படுச்சா காரி துப்புவ போல...........//////

இப்பிடியே வெட்டி பில்டப்ப கொடு......!

மாலுமி said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// மாலுமி said..
/// இம்சைஅரசன் பாபு.. said...
ஹி ..ஹி ..தெரியாத பல விஷயங்கள் இருக்கு ...நீ நடத்து மச்சி .... ///
மச்சி பாகம் மூணு படுச்சா காரி துப்புவ போல...........//////
இப்பிடியே வெட்டி பில்டப்ப கொடு......! ///

வா மச்சி வா........
பில்டப்பு கொடுகரதுகு இன்னும் நிறைய பண்ணோணும் மச்சி....
மச்சி நான் குட்டி ஆடு இளச இருக்குதுன்னு போடு தள்ளிராதிங்க....

செல்வா said...

கார் வாங்கி குப்பை அள்ளிருக்காங்களா ? ஹி ஹி .. நம்ம ஆளுங்க தன்மானம் மிக்கவங்கதான் :-)

மாலுமி said...

/// கோமாளி செல்வா said...
கார் வாங்கி குப்பை அள்ளிருக்காங்களா ? ஹி ஹி .. நம்ம ஆளுங்க தன்மானம் மிக்கவங்கதான் :-) ///

அப்பவும் சரி... இப்பவும் சரி....
நம்ப அரசியல்வாதிகளுக்கு @#$%^$# கொழுப்பு ஜாஸ்தி......

Anonymous said...

கப்பல் எங்க போகுது...எந்த பிரபல பதிவர்னு தெரியலையே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்றா எழவு எழுதிருக்க?

மாலுமி said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என்றா எழவு எழுதிருக்க? ///

மச்சி சரக்கு அடிச்சுட்டு எழுதினேன்...........

மாலுமி said...

/// ஆர்.கே.சதீஷ்குமார் said...
கப்பல் எங்க போகுது...எந்த பிரபல பதிவர்னு தெரியலையே ///

சார்..... இந்த கப்பல் யாரயும் நோக்கி போகல....
சரக்கு அடிச்சுட்டு தெளிவா இருக்குது

TERROR-PANDIYAN(VAS) said...

பல புது தகவல்கள் மச்சி. மேட்டர் நல்லாதான் இருக்கு... :)

TERROR-PANDIYAN(VAS) said...

//கப்பல் எங்க போகுது...எந்த பிரபல பதிவர்னு தெரியலையே //

தண்ணி இருக்க இடத்த தேடி தான்... :)

மாலுமி said...

/// TERROR-PANDIYAN(VAS) said...பல புது தகவல்கள் மச்சி. மேட்டர் நல்லாதான் இருக்கு...///
ஹி ஹி ஹி.....
நன்றி மச்சி

மாலுமி said...

/// TERROR-PANDIYAN(VAS) said...
//கப்பல் எங்க போகுது...எந்த பிரபல பதிவர்னு தெரியலையே //
தண்ணி இருக்க இடத்த தேடி தான்... :) ///

மச்சி நீ எந்த தண்ணின்னு சொல்லவே இல்ல......
ஹி ஹி ஹி பிரண்டு என்ன மச்சி...............