நானும் கவித எழுத போறேன் .....
தக்காளி ...... வெறும்பய எழுதுன எழுத்துக்கு ஏகப்பட்ட தோழிகள் கிடைச்சுட்டாங்க, அதுவும் சிங்கப்பூர், மலேசியா, சீனா, ஹாங்காங், தைவான் இப்படி ஏகப்பட்டது.
இதுனால, நான் தண்ணியடுசுட்டு உளறுறது, டெரர் கும்மி நாதாரிகளுக்கு போன் பண்ணி வாந்தி எடுக்கறது எல்லாம் நின்னு போச்சு.
அதுனால, தமிழ்நாடு அரசுக்கு எந்தவித நஷ்டம் வந்திடக்கூடாதுனு ஒரு நல்லென்னதுக்காகவும், நான் போன் பன்னி பேசலனு மனசு பொக்குனு போன டெரர் கும்மி நாதரிகளுக்காகவும், என்னைய போல குடி மக்களுக்காகவும் மற்றும் பதிவுலகம் நண்பர்களுக்காகவும் நான் இன்று முதல் சரக்கு அடித்துவிட்டு கவிதா ......... மனிக்கவும் கவித, தத்துவம் (டெரர் மக்களே, நம்ம தத்துவம் இல்ல), பொன்மொழிகள் போன்றவை இங்கே பகிரப்படும். அதை பார்த்து, படித்து பயன்பெறுங்கள்.
இதோ உங்களுக்கு ஒரு கவித ....
நன்றி
இப்படிக்கு,
டாஸ்மாக் கவி மாலுமி.
நெற்றிப் புருவம்
என் மூச்சை
நிறுத்தும்..
ரத்த கீறல்
என் இதயத்தில்..
சிரிக்கும் போது
கன்னத்தில்
விழவேண்டிய குழி..
என் இதயத்தில்..
மரணத்தை
முழு மனதுடன்
ஏற்றுக்கொண்டு
கண்ணை மூடுகிறேன்...
யாரும் பார்க்காத
ஒரு வெண்ணிலவைப்
பார்த்து விட்டேனென்று........
2 comments:
சிரிக்கும் போது
கன்னத்தில்
விழவேண்டிய குழி..
என் இதயத்தில்..//
இதை நான் ரெட்டை அர்த்தத்தில் எடுக்கட்டுமா இல்லை ஒத்தை அர்த்தத்தில் எடுக்கட்டுமா?
/// இதை நான் ரெட்டை அர்த்தத்தில் எடுக்கட்டுமா ///
எங்கே .... உங்கள் பொன்னான கவிதையை இங்கே சொல்லுங்க :))
Post a Comment