Monday, June 3, 2013

மப்புடன் எழுதியது - 7

ரொம்ப தூரம் டூ வீலர்ல போகணும்னு ரொம்ப நாளாக நினச்சுட்டு இருந்தேன். நேத்து மதியத்துக்கு சாப்பிட்டதுக்கு அப்புறம், என் சிங்கம் (தண்டர் பறவை) எடுத்துட்டு எங்கே போறதுன்னு தெரியல, ஒரே குழப்பமா இருந்தது .... 

கிழக்கு பக்கம் போக முடியாது, போன ஈரோடு தான் போகணும். தெக்க பக்கம் போன பொள்ளாச்சி தான் போகணும். வடக்க பக்கம் மேட்டுபாளையம் இல்ல மேக்க பாலக்காடு இப்படி எதாவது ஒரு இடத்துக்கு  போகணும்னு முடிவு பண்ணினேன். சரி சாப்பிட எதாவது வாங்கிட்டு போகலாம்னு வண்டிய நேரா மெக்டொனால்க்கு விட்டேன். அங்கே ஒரு மீடியம் சைஸ் கோக் (ஐஸ் நிறைய போட்டு) & வெஜ் பர்கர், ரெண்டு ஸ்மால் பிரெஞ்சு குச்சிய வாங்கிட்டு வெளியே வந்தேன். 

அப்போ தான் எனக்கு உள்ளே இருக்குற நல்லவன் வெளியே எட்டிப்பாதான்.  வண்டி நேர டாஸ்மாக் போச்சு, ஒரு கோட்டர் RC வாங்கிட்டு எல்லாத்தையும் நல்லா சைடு பைல போட்டு முதுகுல மாட்டிட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணி, நல்லவன் கூட சிறுவாணி போனேன்.

பேரூர் தாண்டியவுடன், லேசா தூறல் மழை, சில்லுனு காத்து, ரோட்டுல அதிகம் ஆள், வண்டி நடமாற்றம் இல்லை, 40 டு 50 KM ஸ்பீட்ல, என்ஜாய் பண்ணிட்டு போனேன். கூட ஒரு பிகர் இருந்தா இன்னும் என்ஜாய் தான்.

ஒரு மணி நேரம் டிரைவ் பண்ணி, சாடிவயல் செக் போஸ்ட்க்கு போனேன். அங்கே பெரிய அறிவிப்பு தொங்கிட்டு இருந்தது " இன்று விடுமுறை". சரி அப்படியே திருப்பிட்டு, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க ஒரு இடம் தேடினேன். அதுதான் இது.




கண்ணுக்கு முன்னாடி, பெருசா மழை பெய்யுது ஆனா நான் நின்னுட்டு இருக்குற இடத்துல லேசா தூறல் மட்டும், அமைதியான இடம், மழை பெய்யும் சத்தம் மட்டும் கேக்குது.

சிங்கம் மேல ஏறி உக்காந்து, தங்க ராஜாவா இந்த ஒரு கிளு கிளுப்பான நேரத்துல மெதுவா, சில நேரத்துல அழுத்தமா, பிரெஞ்சு கிஸ் கொடுத்துட்டு என்ஜாய் பண்ணினேன். அதுக்குள்ள நல்லவன் என் முதுக சொரிய ஆரம்பிச்சான். சில்லுனு இருந்த கோக் கொஞ்சம் பூமிக்கு தானம் பண்ணிட்டு அதுல கோட்டர் RCய அப்படியே கலந்தேன். பிரெஞ்சு குச்சிய எடுத்து வெச்சு, ஒரு வாய் குடிச்சேன். 





என்ன ஒரு சுகம் ....... 
என் வாழ்க்கைல இப்படி ஒரு சூழ்நிலைல சரக்கு அடிச்சது இல்லை :)

அப்படியே, மழை பெய்யறது, நிக்கறது, காத்து வீசறது, இந்த ஆட்டத்தை ஒரு மணி நேரம் பாத்துட்டு, வாங்கிட்டு வந்தது எல்லாம் தின்னு புட்டு கிளம்பினேன்.

கொடுமை ஏன் இன்னும் இளமையா இருக்குதுன்னு இப்போ தான் தெரியுது :)))


14 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அப்போ தான் எனக்கு உள்ளே இருக்குற நல்லவன் வெளியே எட்டிப்பாதான்.//

அந்த நல்ல ராஸ்கல இங்கே கூட்டிட்டு வாய்யா நானும் என்கிட்டே இருக்குற நல்லவனை அங்கே நான் அனுப்புறேன்.

Anonymous said...

nice..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இவன் ரொம்ப நல்ல்ல்ல்ல்லவன்ன்ன்ன்ண்டா..............

பட்டிகாட்டான் Jey said...

quarter adikka emputtu thooram !

Rangs said...

North east poyirukkalaamalla? Sathy Road??

மாலுமி said...

/// அந்த நல்ல ராஸ்கல இங்கே கூட்டிட்டு வாய்யா நானும் என்கிட்டே இருக்குற நல்லவனை அங்கே நான் அனுப்புறேன். ///

ரெண்டு நல்லவனுக ஒரே பிராண்டு சரக்கா ???

மாலுமி said...

/// Anonymous said...
nice.. ///

யாரு சாமீ ....... நீங்க ???

மாலுமி said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இவன் ரொம்ப நல்ல்ல்ல்ல்லவன்ன்ன்ன்ண்டா.............. ///

இத தான் நானும் மூணு வருசமா சொல்லிட்டு இருக்கேன் ........ எவன் நம்புறான் :)))

மாலுமி said...

/// பட்டிகாட்டான் Jey said...
quarter adikka emputtu thooram ! ///

டாஸ்மாக்ல உக்காந்து அடிச்சு சலிச்சு போச்சு, அதுனால தான் இப்படி இயற்கையோட :)

மாலுமி said...

/// Rangs said...
North east poyirukkalaamalla? Sathy Road?? ///

சத்தி ரோடு பக்கம் போனா ...... சாப்ட்வேர் பொண்ணுகள பாத்தா மனசு மாறிடும். ஏனா நான் ரொம்ப நல்லவன். அதுனால தான் அந்தப்பக்கம் போகல :)

Gkm said...

சூப்பரப்பு

அருண் பிரசாத் said...

ரோட்டு ஓரம் உட்கார்ந்து கள்ள சாராயம் குடிச்சிட்டு என்னா பில்டப்பு பாரு பக்கிக்கு....

மாலுமி said...

/// கை ப்புள்ள said...
சூப்பரப்பு ///

நன்றி னா :)

மாலுமி said...

/// அருண் பிரசாத் said...
ரோட்டு ஓரம் உட்கார்ந்து கள்ள சாராயம் குடிச்சிட்டு என்னா பில்டப்பு பாரு பக்கிக்கு.... ///

தக்காளி ...... உனக்கு பொறாம :)))
ஒரு இலக்கியவாதி ஆகலாம்னு பாத்த விட மாடிங்கராணுக, இருடி அடுத்த வாரம் சாராயம் குடிச்சுட்டு நைட் கால் பண்ணுறேன் :)