Tuesday, May 10, 2011

இந்திய மகாராஜகளும் அவர்களின் ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் - பாகம் ஒன்னு




ரோல்ஸ் ராய்ஸ் காரின் வரலாறு, அது இந்தியாவுக்குள் டயர் பதித்த கதைகளையும் அதனை நம் மகாராஜாக்கள் எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் என்ற விவரத்தை இங்க பாக்கலாம்.

ஹென்றி ராய்ஸ் (Frederick Henry Royce) என்ற பிரிடீஷ்காரர், ஏழ்மையான குடும்பத்தில் ஐந்தாவது வாரிசாக பிறந்தார். அவருக்கு கணிதம், மெக்கானிகல் துறைகளில் நிறையவே ஆர்வம், ஆனால் குடும்ப சூழ்நிலையில் படிக்கவில்லை. பல்வேறு வேலைகள் பார்த்தார். எல்லாம் இயந்திரம் சம்பத்தப்பட்ட வேலை தான். தன் 21 வது வயதில் சொந்தமாக ஒரு சிறு நிறுவனத்தை தொடங்கினர். மோட்டார் வாகனத்துக்கான சிறு சிறு பாகங்களை தயாரித்து கொடுக்கும் நிறுவனம் அது. அவர் பிழைப்பு ஓடியது.

ராய்ஸ்க்கு 40 வயது ஆன போது, சொந்தமாக கார் ஒன்றை வாங்கும் வாய்ப்பு கிடைத்தது. அது Decauville என்ற பழைய கார். அதை ஓட்டி பார்த்த ராய்ஸ்க்கு கோபம் தான் வந்தது. அதிக சத்தம், மிக மெதுவான இயக்கம், ஸ்டார்ட் செய்வது ரொம்பவே கஷ்டப்படவேண்டும் என்று ஏகப்பட்ட குறைகள்.

தானே ஒரு காரை தயாரித்துப்பாக்கலாம் என்று முடிவு செய்த ராய்ஸ், படபடவென களத்தில் குதித்தார். ஒரே வருடத்தில் ஒரு புதிய கார் தயாரானது. 1904 ஆம் வருடம் ஏப்ரல் 1 அன்று அதை வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தார். அது ஓட்டுவதுக்கு சத்தமின்றி, சிரமமின்றி இருந்தது.

ராய்ஸ்ன்  புதிய வெற்றிகரமான கார் பற்றி சார்லஸ் ஸ்டீவர்ட் ரோல்ஸ் (Charles Stewart Rolls) என்பவர் அறிந்தார். ரோல்ஸ் நிறைய படித்தவர், கார் வியாபாரி, நல்ல வசதி படைத்தவர். ரோல்ஸ், ராய்ஸ் உடன் இணைந்து புதிய ரகக் கார்கள் தயாரிக்க ஒப்பந்தம் செய்துக் கொண்டார்கள். அவர்கள் தயாரிக்கும் காருக்கு ரோல்ஸ் ராய்ஸ் (RR) என்று பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள். வேலைகள் தொடங்கப்பட்டன.

1905 இல் முதல் ரோல்ஸ் ராய்ஸ் கார், ஒரு பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடியது. பின்னர் படிப்படியாக இங்கிலாந்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பரவ ஆரம்பித்தது. விக்கப்பட்ட முதல் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை 395 பவுண்ட். கோஸ்ட், டான், பாண்டம் என்று பல்வேறு மாடல்களில் வந்து கலக்க ஆரம்பித்தன. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இருந்த நாடுகளில் எல்லாம் ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் நுழைய ஆரம்பித்தன.

1908 ஆம் ஆண்டு பம்பாய்க்கும் கோலாபுருகும் இடைய ஒரு கார் பந்தயம் நடைபெற்றது. அந்த பந்தயத்தை காண குவாலியர் மகாராஜா இரண்டாம் மாதவ்ராவ் சிந்தியா வந்திருந்தார். அது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நடைபெற்ற பந்தயம். சாலைகள், சரியான பாதைகள் கூட இல்லாத இடங்களையும் சேர்த்து மொத்தம் 120 மைல்களை கடக்கவேண்டும். அதில் ஆறு மலைகளை சுற்றி வர வேண்டும் என்பது அடக்கம். பந்தயத்தில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் சுலபமாக ஜெய்த்தது.

Pearl of India என்று பெயரிடப்பட்ட அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரின் அழகும் கம்பீரமும் வேகமும் சிந்தியாவை அசத்தியது. RR என்று சுருக்கமாகவும் கீழே Rolls Royce என்று முழுமையாகவும் பொறிக்கப்பட்ட முத்திரை. முகப்பில் வெள்ளியால் செய்யப்பட்ட சிறகு விரித்துப் பறக்கும் தேவதை. பளபளவென்று க்ரீம் நிற உடல். உடனே பணம் கொடுத்து அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை தனதாக்கிக் கொண்டார் சிந்தியா. பெருமை பொங்க அதனை தன் சமஸ்தானமெங்கும் ஓட்டி பவுசு காட்டினார். பிற சமஸ்தான மகாராஜக்களுக்கும் இந்த செய்தி பரவியது.
(நன்றி : திரு. முகில் - அகம், புறம், அந்தப்புரம்)

இது சும்மா ஒரு முன்னுரை தான். இதுக்கு அப்புறம் தான் இருக்குது ரோல்ஸ் ராய்ஸ் கார் நம்ப மகாராஜாக்கள் கிட்ட சிக்கிட்டு அது பட்ட பாடு. அதுக்கு நம்ப மாதிரி உயிர் இருந்துச்சுனா எல்லா காரும் தூக்கு போட்டு தொங்கிருகும்.

பாகம் ரெண்டு கூடிய விரைவில்.....................

21 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

ஹி ..ஹி ...என்னாத்த சொல்ல ..நீ கலக்கு மச்சி

NaSo said...

மச்சி நீ கதை சொல்லும் அழகுல நாமளும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் வாங்கணும் தோணுது.

மாலுமி said...

ஹி ஹி ஹி
இதுக்கு அப்புறம் தான் இருக்குது........
நம்ப நால நினைக்க முடியாதது எல்லாம் அந்த காலத்துல நடந்துருகுது....
நம்ப மகாராஜாக்கள் போட்ட கூத்து அப்படி

மாலுமி said...

/// மச்சி நீ கத சொல்லும் அழகுல நாமளும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் வாங்கணும் தோணுது.///
மச்சி இப்போ அந்த கார தொட்டு பாகரதுகு ஒரு வெல.......

TERROR-PANDIYAN(VAS) said...

கலக்கர மச்சி! ஆனா காப்பி பேஸ்ட் பண்ணியே காலத்த ஓட்டு.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட நாதாரி நல்லா எழுதி இருக்கியேடா பன்னாட......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// TERROR-PANDIYAN(VAS) said...
கலக்கர மச்சி! ஆனா காப்பி பேஸ்ட் பண்ணியே காலத்த ஓட்டு.. :)
/////

பின்ன டீ பேஸ்ட்டா பண்ண முடியும்... ராஸ்கல்...... !

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
கலக்கர மச்சி! ஆனா காப்பி பேஸ்ட் பண்ணியே காலத்த ஓட்டு.. :)

மாலுமி said...

/// TERROR-PANDIYAN(VAS) said...கலக்கர மச்சி! ஆனா காப்பி பேஸ்ட் பண்ணியே காலத்த ஓட்டு.. :)///

திருடுறது தான் தப்பு...... காப்பி பேஸ்ட் பண்ணுறது தப்பா இல்ல.........

மாலுமி said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said... //// TERROR-PANDIYAN(VAS) said...

கலக்கர மச்சி! ஆனா காப்பி பேஸ்ட் பண்ணியே காலத்த ஓட்டு.. :)
/////
பின்ன டீ பேஸ்ட்டா பண்ண முடியும்... ராஸ்கல்...... !///

விடு மச்சி....... அவனுக்கு அறிவு அவளவு தான்

செல்வா said...

அண்ணா நீங்க தொடர்ந்து எழுதுங்க. ரோல்ஸ் ராய்ஸ் கார்ல இவ்ளோ வரலாறு இருக்கா ? நானும் தெரிஞ்சிக்கிறேன்!

அப்புறம் எல்லா மன்னர்களும் வாங்க ஆரம்பிச்சிட்டாங்களா ? அதனால போர் எல்லாம் வந்திருக்குமோ ?

மங்குனி அமைச்சர் said...

யாருய்யா அது மாலுமி பிலாக்க ஹேக் பண்ணியது ???? பாவம் அவரே இப்போதான் பிளாக் ஆரம்பிச்சு இருக்கான்

மாலுமி said...

/// யாருய்யா அது மாலுமி பிலாக்க ஹேக் பண்ணியது ???? பாவம் அவரே இப்போதான் பிளாக் ஆரம்பிச்சு இருக்கான் ///
யோவ்.... ஏன் என்ன ஆச்சு உன்னக்கு? இதுக்கு தான் வெளிய ஜாஸ்தி சுத்தாத........மூளை கொலம்பி எப்படி பேசுற பாரு

மங்குனி அமைச்சர் said...

அடப்பாவி நீ இப்படித்தான் பதிவு போடுவியா ?????

ஐய்யய்யோ ..... தெரியாம பழகி தொலஞ்சிட்டமே .... இன்னும் என்ன என்ன தாங்க வேண்டி இருக்குமோ

சித்தப்பு நீ கலக்கு சித்தப்பு ......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டண்டணக்கா டண்டணக்கா சரக்கு
கடிச்சிக்கடா கடிச்சிக்கடா முறுக்கு
சைதா பேட்டை ரயிலு ரயிலு

மாணவன் said...

வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்து தொடர்ந்து கலக்குங்க மாமு...

மாலுமி said...

//////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டண்டணக்கா டண்டணக்கா சரக்க
கடிச்சிக்கடா கடிச்சிக்கடா முறுக்கு
சைதா பேட்டை ரயிலு ரயிலு //////

மச்சி எதுக்கு இப்போ இந்த குத்து டான்ஸ்?????

மாலுமி said...

/// மாணவன் said...

வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்து தொடர்ந்து கலக்குங்க மாமு...///

கண்டிப்பா மச்சி..........

மாலுமி said...

//////கோமாளி செல்வா said...

அண்ணா நீங்க தொடர்ந்து எழுதுங்க. ரோல்ஸ் ராய்ஸ் கார்ல இவ்ளோ வரலாறு இருக்கா ? நானும் தெரிஞ்சிக்கிறேன்!
அப்புறம் எல்லா மன்னர்களும் வாங்க ஆரம்பிச்சிட்டாங்களா ? அதனால போர் எல்லாம் வந்திருக்குமோ ?/////////

செல்வா.......

பாகம் ரெண்டுல தான் விசயமே இருக்குது

Unknown said...

மாப்ள நல்லா சொல்லி இருக்கய்யா!

மாலுமி said...

/// விக்கி உலகம் said...
மாப்ள நல்லா சொல்லி இருக்கய்யா! ///

நன்றி விக்கி.......
இன்னும் அட்டகாசம் நிறைய இருக்குதுங்க....